கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குமாறும் மீண்டும் இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த குழு ஐந்து நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளைய தினம் இலங்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் 14 ம் திகதி வரையில் தங்கியிருக்கவுள்ள இந்த குழு, வடக்கின் முகாம்களுக்கு சென்று பார்வையிடவிருப்பதுடன், முக்கியஸ்தர்களையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர்கள் மலையக பிரதேசங்களுக்கும் சென்று பார்வையிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்தக் குழுவில், இந்திய இராஜ்ய சபா உறுப்பினரான சுதர்ஷ்சன் நாச்சியப்பன், லோக்சபா உறுப்பினர்களான எஸ் வீ. சிட்டன், எஸ் அழகிரி, மற்றும் ஜே எம் ஆரோன் ரசீட் ஆகிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் லோக்சபா உறுப்பினர்களான டீ கே எஸ் இலங்கோவன், ஹெலன் டேவிட்சன், மற்றும் லோக்சபா நாடாளுமன்ற குழு தலைவர் ஏ கே எஸ் விஜயன் ஆகியோர் வரவுள்ளனர்.
thanks : tamiwin
-

டில்லியில் தமிழக பத்திரிகையாளர்களிடம் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் நேற்று பேசும்போது, இலங்கை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இந்த விஷயங்கள் குறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப் பட்டுள்ளன. மேலும், போர் நடந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் தான் மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கை தாமதமாகிறது. கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படும் வரை, குடியேற்றத் திற்கு சாத்தியமில்லை. கண்ணிவெடி அகற்றப்படுவது குறித்த காலக்கெடு எதுவும் கூறிவிட முடியாது. முகாம்களை பார்வையிட எம்.பி.,க்கள் குழு செல்வது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கை. அரசியல் கட்சித் தலைவர்களா எல்லது எம்.பி.,க்களா அல்லது எம்.எல்.ஏ.,க்களா என்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு மூன்று உரிமைகள் தான் உள்ளன. மீனவர்கள், கச்சத்தீவில் வலையை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வெடுத்துக் கொள்ளலாம், அங்குள்ள மாதா கோவில் விழாவில் பங்கேற்கலாம். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை வழங்கப்படவில்லை. மீன்பிடித்தல் தொடர்பாக இந் தியா போட்டுள்ள ஒப்பந்தப்படி தற்போது அனைத்து நடவடிக்கைகளும் கையாளப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டன. ஒரு சில உயிரிழப்புகள் நடந்தன. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழர்களை அவரவர் இடங்களில் குடியேற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசும், தமிழர்கள் பிரதிநிதிகளும் பேசிக் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் இந்தியா தரப்பில் போதிய ஒத்துழைப்பும் உதவியும் மட்டுமே வழங்க முடியும்.
ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கையும் இணைக்க வேண்டும். ஆனாலும் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வசித்துவந்த பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் நடக்கிறது என்பதை ஏற்கமுடியாது. இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
thanks : dinamalar
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய, இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டுக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்து உள்ளது. இலங்கை அகதி முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு இதுவரை இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தமிழக அரசால் முதலில் அனுப்பப்பட்ட 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவு மற்றும் துணிகளும், 2 வது முறையாக 2 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவு, துணிகள் மற்றும் பாத்திரங்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் அளிக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்திய அரசின் சார்பாக 2 முறை தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் செயற்கை கை மற்றும் கால்களை பொருத்தும் வகையில் பிரபல ஜெய்ப்பூர் செயற்கை கை, கால் தயாரிக்கும் நிறுவனத்தின் மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த மருத்துவ குழு சுமார் 7 ஆயிரம் பேருக்கு செயற்கை கால் மற்றும் கைகளை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு அகதி முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடி பெயரும் வகையில் அவர்களது இல்லங்களை சரி செய்யவும், தேவையாகும் பட்சத்தில் புதிய வீடுகள் நிர்மாணிக்கத் தேவையான சுமார் 2,600 மெட்ரிக் டன் வீடு கட்டும் பொருட்களை இந்திய அரசு ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது. இதேபோல் மேலும் கூடுதலாக 2,600 மெட்ரிக் டன் வீடு கட்டும் பொருட்களை அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது. கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்தியாவின் சார்பாக சர்வத்ரா மற்றும் ஹாரிசன் என்ற அமைப்புகளை இந்திய அரசு சார்பாக ஈடுபடுத்தி உள்ளது. இந்த குழுக்களை கடந்த ஜுலை மாதத்தில் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. மேலும் 3 குழுக்களை விரைவில் அனுப்ப உள்ளது. குழந்தைகளின் கல்விக்கு தேவையான கணினிகளையும் இந்திய அரசு வழங்க முன்வந்துள்ளது. போரினால் கணவர்களை இழந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், மேலும் அவர்கள் சுயமாக தங்களது வாழ்க்கையை நடத்த அனைத்து உதவிகளையும் சேவா என்ற அமைப்பின் மூலமாக வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் உண்மை நிலைமையை கண்டறியும் வகையில் இந்திய அரசு இந்த மாத இறுதிக்குள் அரசியல் கட்சி உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளிவர உள்ளது. இந்த குழுவில் இந்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 1974 மற்றும் 1976 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சத்தீவு பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை இல்லை. இந்திய அரசை பொறுத்தவரை இந்த பிரச்சினை முடிந்துபோன பிரச்சினை. திரும்ப இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிடாது. இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு எடுக்க வேண்டும். இப்பிரச்சினையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த பங்கும் கிடையாது. மேற்கண்ட தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்தும், கச்சத்தீவை மீட்க கேட்டும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அலுவலகம் முன் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய மீனவர் பிரிவு தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தமிழக துணைத்தலைவர் ராஜா,
இலங்கையில் மின்சாரம் பாய்ச்சிய முள் வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
இலங்கை அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு, கண்துடைப்புக்காக தற்போது குடியுரிமை பற்றி பேசுகின்றனர். இது ராஜபாக்சேவுக்கு உதவுவது போன்ற செயல். சோனியாவின் தனிப்பட்ட கோபத்தால் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர் என்றார்.
தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம்,
’’இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும். தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்க கூடாது.
இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபக்ஷவுக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும்.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது’’ என்றார் அவர்.
-
ஜெனீவா, மே. 28-
இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.
இதுபற்றி ஐ.நா. சபையில் மனித உரிமை குழு விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் முயற்சியால் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கடந்த 2 நாட்களாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது.
தொடக்கத்தில் இருந்தே தீர்மானத்துக்கு எதிராக அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது. இதேபோல சீனா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆதரித்தன.
நேற்று இரவு ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 17 நாடுகளும், எதிர்த்து இந்தியா உள்பட 22 நாடுகளும் ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
எனவே மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா.சபை மனித உரிமை குழு விசாரணை நடத்த தேவை இல்லை.
இந்த தீர்மானம் வந்ததுமே இலங்கை பல்வேறு நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. மனித உரிமை குழுவில் உறுப்பினராக உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா, கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 22 நாடுகள் இலங்கையை ஆதரித்து உள்ளன.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராக ஓட்டு போட்டன. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு போடக்கூடாது என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை புறக்கணித்து இந்தியா இலங்கையை ஆதரித்து உள்ளது.
இதே விவாதத்தின்போது இலங்கை தனது நாட்டு மறு சீரமைப்புக்கு சர்வதேச நாடுகளின் நிதி உதவியை கோரும் தீர்மானத்தையும் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஓட்டு போட்டன. ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. எனவே இலங்கைக்கு சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறிப்பட்டு வருவது குறித்தும் அப்பாவி மக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு வருவதும் குறித்தும் விவாதிப்பதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்புக் கூட்டம் நாளை கூடுகிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கோரியதை அடுத்து இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இத் தீர்மானம் தடை விதிக்கிறது.
இந்தத் தீர்மானத்துக்கு சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கை தமிழர் நலனை கைவிடுவதற்கு இணையாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு இலங்கை அரசு செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பாவிகள், மக்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே தீர்மானத்தை ஆதரித்தால் இதுவரை செய்த எல்லாவற்றுக்கும் இந்தியா உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். இறுதிக் கட்ட போரில் ஏராளமான அளவில் இரசாயன ஆயுதங்களும் கொத்து வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போர் நடைபெற்ற இடங்களுக்கும் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் ஐ.நா. பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று ராஜா கூறினார்.
இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ந் தேதி சென்னை சைதாப்பேட்டை, 7 ந் தேதி திருச்சி, 13 ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் பேரணி நடத்துவது. இலங்கையில் உணவு, மருந்து இன்றி போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும்.
ராஜபக்சேயை போர் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழக எம்.பி.க்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மைகளை கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் எந்தக் காரணத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களின் பிரச்னைகளின் மூல காரணம் என்ன என்பதையும் கண்டறித்து தீர்க்க வேண்டும்.
அந்நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். இலங்கை தங்கள் நாடு என்ற உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் அமைதியான நட்புறவையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவுக்கு அந்நாட்டில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்பே பெரும் தடையாகவுள்ளது.
பாகிஸ்தானுடன் நட்புறவுடன் செயல்பட இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் முதலில் அங்குள்ள பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து அண்டைநாடுகளும் நிம்மதி அடையும் என்றார்.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்காவின் படை நடவடிக்கையின் வெற்றியை இந்தியா உட்பட 14 நாடுகள் பாராட்டியுள்ளதுடன், சிறிலங்கா மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கும் அவை தயாராகி வருகின்றன.
சிறிலங்கா மீதான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் எதிர்வரும் செவ்வாய்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 17 நாடுகளின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளும் இந்த 17 நாடுகளில் அடங்கும்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் ஆகியவற்றின் வேண்டுகோள்களை புறக்கணித்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: டெல்லியில் 12ம் தேதி நடத்துவதாக இருந்த உண்ணாவிரதத்தை 13ம் தேதிக்கு மதிமுக மாற்றியுள்ளது.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்த நிறுத்தாமல், இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த உண்ணாவிரத போராட்டம் 13-ந் தேதி வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.