இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை நியமிக்க கோரிக்கை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்

Posted முற்பகல் 2:05 by S R E E in லேபிள்கள்: , ,

இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ந் தேதி சென்னை சைதாப்பேட்டை, 7 ந் தேதி திருச்சி, 13 ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் பேரணி நடத்துவது. இலங்கையில் உணவு, மருந்து இன்றி போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும்.

ராஜபக்சேயை போர் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழக எம்.பி.க்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மைகளை கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.0 comment(s) to... “இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை நியமிக்க கோரிக்கை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails