போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறிலங்கா அரசின் வதைமுகாம்களுக்குள் வாழும் உறவுகளை விடுதலைசெய்யக்கோரி மாபெரும் பேரணி சனிக்கிழமையன்று (17.10.2009) நடைபெறவுள்ளது.

உலக நாடுகளிடம் கையேந்தி பெரும் அழிவாயுதங்கள்கொண்டு தமிழினத்தின் பல்லாயிரம் உயிர்களை பலியெடுத்து இரத்தக்கறைகளில் தோய்ந்தபடி சிங்களப்பேரினவாதம் தொடர்ச்சியான மனிதவுரிமை மீறல்களை செய்து வருகிறது.

பட்டிணி ஓலங்களும், சாவுகளும் மலிந்துபோய், குரல்வளை நெரிக்கப்பட்ட மனிதர்களாய், அடக்குமுறையின் உச்சமாய் பெரும் துன்பத்துக்குள் வாழும் மக்களை விடுதலைசெய்யக்கோரி பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் சுதந்திர தாகம் பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்தப்பேரணியை எழுச்சியாக்கி எமது மக்களின் வாழ்விற்கு உதவிட பிரான்சில்வாழும் அனைத்து உறவுகளையும் தவறாது இந்தப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களே உங்களது மக்களை காப்பற்றப் புறப்படப் போகின்றீர்களா? அல்லது சுகபோக வாழ்க்கையில் தீபாவளியை கொண்டாடப் போகின்றீர்களா? சிந்தியுங்கள்.

இடம்; - Port-Royal (RER-B) இல் இருந்து
Place Valhubert வரை

காலம் - 17.10.2009 சனிக்கிழமை
நேரம் - 14.00மணி

டெல்லி: புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்திற்குள் புகுந்து நடத்திய தாக்குதலால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனத் தூதரகத்திற்குத் தரப்படுவதைப் போன்ற பலத்த பாதுகாப்பு தங்களது தூதரகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என அது கோரியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் சில மாதங்களுக்கு முன்பு லேசான தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியினர் துணிகர தாக்குதலை நடத்தியுள்ளனர். 40 முதல் 50 பேர் அடங்கிய புதிய தமிழகம் கட்சியினர் திடீரென தூதரகத்திற்குள் நேற்று புகுந்து நடத்திய தாக்குதலால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று ஜந்தர்மந்தர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நேற்று இலங்கைத் தமிழர்களை மறு குடியேற்றம் செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி வருவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், யாதவ மகாசபை ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் இல்லம் நோக்கி அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அதை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கூட்டத்திலிருந்து ஒரு பிரிவினர் அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குள் தடாலடியாக புகுந்தனர்.

அங்கு கண்ணில் பட்ட பொருட்களை தாக்கி சேதப்படுத்தினர். கல்வீச்சு நடத்தி கண்ணாடி ஜன்னல், கதவுகள், பூத்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.

அங்கு குறைந்த அளவே போலீஸார் பாதுகாப்புக்கு இருந்ததால் அவர்கள் சுதாரித்து வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், டிவி கேமராமேன்கள் படம் பிடித்தனர். அதைப் பார்த்த தூதரக அதிகாரிகள், அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்துமாறு போலீஸாரிடம் கூறினர். இதையடுத்து போலீஸார், பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்த முயன்றதால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தூதரகத்தில் குறைந்த அளவே ஊழியர்கள் இருந்ததால் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தால் தூதரக ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வருத்தம்...

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவிக்கையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தூதரகம் மீதான தாக்குதல் வன்முறைச் செயலாகும்.

தகவல் அறிந்ததும் போலீஸார் உடனடியாக பாதுகாப்புப் பணியில் இறங்கினர். தூதரக வளாகத்தில் தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு திபெத் போராட்டக்காரர்கள் சீனத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் டெல்லியில் ஒரு நாட்டுத் தூதரகம் மீது நடந்துள்ள தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து தூதரகத்தின் முதல் செயலாளர் குணரத்னே கூறுகையில், நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திடமும், டெல்லி காவல்துறையிடமும் எடுத்துக் கூறியுள்ளோம்.

40 முதல் 50 பேர் வரை தாக்குதல் நடத்தினார்கள். தமிழர்களைப் போல இருந்தார்கள். இலங்கை அரசைக் கண்டிக்கும் தட்டிகளை கையில் வைத்திருந்தனர்.

விடுமுறை என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லை. பல பூத் தொட்டிகளையும், கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாங்கள் வருவதற்குள் அனைவரும் தப்பி ஓடி விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி கூடுதல் ஆணையர் தாஸ் கூறுகையில், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. எல்லாமே 2 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. இதில் யாரும் காயமடையவில்லை. போலீஸார் சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டதால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் வரும்போதே, டிவி செய்தியாளர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். டிவி வீடியோ படங்களைப் பார்த்து தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம் என்றார்.

கடந்த 50 நாட்காளாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் " அடங்காப்பற்று" போராட்டத்தில், 26.05.09 செவ்வாய்க்கிழமை பி.பகல் 14.00 மணிமுதல் 18.00 மணிவரை பிரான்ஸ் UNESCO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களை கொன்றொழித்து, பல்லாயிரக்கணக்கானவர்களை அங்கவீனர்களாக்கிய


சிறிலங்கா இனவாத அரசினை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தக்கோரியும்,


தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசையான தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும்,


தமிழ்மக்களின் காப்பரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதித்திருக்கும் தடையை நீக்குமாறு கோரியும்,


மனிதாபிபமான பணியினை தமிழர் தாயகப்பகுதிகளில் சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் சுதந்திரமாகவும், உடனடியாகவும், பணிபுரிய அனுமதியளிக்க வேண்டும் என்று சிறீலங்கா அரசை சர்வதேச நாடுகள் வற்புறுத்த வேண்டும் எனக்கோரியும்


ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

அனைத்து தமிழ் மக்களையும் காலத்தின் தேவையை உணர்ந்து ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்


Lieu: UNESCO,

Place Fontenoy (75007 Paris)

: Metro. Segur (Ligne 10)

தமிழர் ஒருங்கிணைப்பு குழு
Tel: 06 11 72 59 78


---


சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்
48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை
வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை
பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009
(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை

நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை
ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்க இருக்கிறார்.

அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு
ஆதரவு தெரிவிக்கவும்.

சர்வதேச சமூகத்தின்
கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு
வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்

-

இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).

கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்

தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444

சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.

நிர்வாக குழு
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம்


நிகழ்வின் படங்கள்

http://picasaweb.google.co.in/Earnestbrothers/tJYJTC#

சிட்னி மாநகரில் தமிழீழ தாயகத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை எடுத்துக்காட்டுவதுடன் எமது மக்களுக்கு நிரந்தர நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிட்னி மாட்டின் சதுக்கத்தில் ஸ்டொப் த வோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று இந்த பேரணியை முன்னின்று ஏற்பாடு செய்திருந்தனர். சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல அவுஸ்திரேலியர்களும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வக்கீல் ஃபிலிப் போல்ட்டன், தேவாலய உறுப்பினர் ரெவ் ஜோன் ஃபார் இ ஸ்டொப் த வோர் சங்க உறுப்பினர் ஃபிப் கென்மன், National Territory Education உறுப்பினர் மைக்கல் தொம்சன், கிறீன் கவுன்சில் உறுப்பினர் கிரிஸ் கரிஸ், Edmund Rice Centre உறுப்பினர் ஃபில் கிலன்டனிங் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இளையோர்கள் மருத்துவர் சாம்பவி பரி அட்ரியன் ஃபிரான்சிஸ் மயூரன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.

இதில் உரையாற்றிய வக்கீல் ரெவ் ஜோன் ஃபார் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்படுத்திய கொலைத் தாக்குதல்கள் கொடுமைகள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார். கிறீன் கவுன்சில உறுப்பினர் கிரிஸ் கரிஸ் கிறீன் பார்ட்டி எமக்கு அதரவாக வெளியிட்ட அறிக்கையை வாசித்தார்

அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி கொடுப்பதன் மூலம் தமிழர்களின் அழிவுக்கு உதவுகிறார்கள் என்பதையும் இலங்கை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழர்களின் அழிவுக்கு ஓரு காரணமாக இருப்பதை உரையாற்றிய அணைவரும் சுட்டிக்காட்டினர்.

உடனடியாக மருந்து மற்றும் உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச்சேர வேண்டும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்கள் உடனே வன்னிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் தடுப்பு முகாம்களில் இருக்கும் எமது உறவுகள் உடனே தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்படுகிறது

எமது மக்கள் சுதந்திரமாக வாழும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதில் எமது புலம்பெயர் மக்கள் திடமாக இருப்பதை பெரும்திரளாக வந்த மக்கள் கூட்டம் பிரதிபலித்தது. உறவுகளை இலந்த வலி மனதில் இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் சுயரூபத்தை வெளி உலகுக்கு காட்டி தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளை காப்பாத்தி அவர்களுக்கு சுதந்திரமான வாழ்வை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக வீதிகளில் இறங்கி போராட தயாராகிவிட்டார்கள்.

தனி தமிழீழமே நிரந்தரமான முடிவு என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

மாட்டின் சதுக்கத்தில் நடந்த நிகழ்வை தொடர்ந்து டவுன் கோல் வளாகத்தை நோக்கி “தமிழீழமே வேண்டும்”, “கெவின் ரோட் அழிவுக்கு துணை போக வேண்டாம்” என கோசங்கள் எழுப்பிய வண்ணம் பேரணியாக சென்றனர்.

அங்கு உரையாற்றிய தமிழ் இளையோர் தனி தமிழீழம் விரைவில் மலரும் அதற்கான ஏற்பாடுகளில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.


ஈழத் தமிழர்களைக் காப்போம்
மதுரை, திருச்சியில் பேரணி- பொதுக்கூட்டம்
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் தீர்மானம்

சென்னை, மே 23- ஈழத் தமிழர்களைக் காப் போம் என்னும் பெயரில் சென்னையில் பொதுக் கூட்டமும், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற உள்ளன.

ஈழத் தமிழர் வாழ் வுரிமை மீட்பு இயக்கத் தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று (23.5.2009) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி அவர்களின் தலை மையில் நடைபெற்றது.


கூட்டத்தில், தொல். திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப. வீர பாண்டியன், பெருங் கவிக்கோ வா.மு. சேது ராமன், பொன். குமார், கவிஞர் மு. மேத்தா ஆகி யோர் கலந்துகொண் டனர்.
கீழ்க்கண்ட தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது.
1. ஈழத் தமிழர் களைக் காப்போம்! எனும் பொருளில் கீழ்க் கண்ட ஊர்களில் பேர ணியும், பொதுக்கூட்ட மும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு செய்யப் படுகிறது.
1.6.2009 மாலை சென்னை - சைதாப்பேட்டை தேரடி தெருவில் (பொதுக்கூட்டம் மட்டும்).
7.6.2009 மாலை திருச்சி - பேரணியும், பொதுக்கூட்ட மும்.
13.6.2009 மாலை மதுரை - பேரணியும், பொதுக் கூட்டமும்.
பேரணி, பொதுக் கூட்டத்தின் நோக்கங் கள் வருமாறு:-
1. ஈழ மண்ணில் உண வின்றியும், மருந்தின்றி யும் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பன் னாட்டுப் பார்வையா ளர்களின் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவிகள் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
2. சொந்தத் தேசத்தில் அகதிகளாக வாழும் அம்மக்களை, அவரவர் பகுதிகளில் மீள் குடி யேற்றம் செய்திட உலக நாடுகள் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3. தமிழின அழிப் பையே நோக்கமாகக் கொண்டு, தமிழீழ மக் களை அழித்தொழித்த (ழுநடிஉனைந) ராஜபக் சேயைப் போர்க் குற்ற வாளியாக உலக நீதிமன் றத்தில் நிறுத்தவேண்டும்.
4. தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பி னர் குழு ஒன்று, உட னடியாக இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண் டும்.
5. இலங்கைக்கான இந்தியத் தூதுவராகத் தமிழர் ஒருவரே உடன டியாக நியமிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர் மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒரு மாபெரும் தமழின அழிப்பை செய்து முடித்து விட்டு இன்று இழிநிலை வெற்றியை கொண்டாடுகிறது சிங்கள அரசு. இந்த நாளை உலகத்தமிழர்கள் துயரம் நிறைந்த கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

பிரான்சில் மக்கள் எழுர்ச்சிப்போராட்டம் இரவு பகலாகத்தொடர்ந்து 47வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை போரிலே சாவடைந்தவர்களுக்கான சுடர் வணக்கம் நடைபெறுவதோடு நேற்றய நாள் அடையாள உண்ணா நிலைப்போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.







பாராளுமண்றத்தின் முன் மக்கள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை அந்த உறவுகளுக்காய் இறுதிவரை போராடி மரணித்த உணர்வான தமது போராளிகளை என அனைவரையும் மனதிலே தாங்கி அந்த இழப்புகளை தாங்கமுடியாது விம்மி வெடித்து விழிநீரை வடித்தவண்ணம் பாராளுமண்ற சதுக்கத்தை நிறைத்தது.

கறுத்தகொடி விரித்ததுபோல புல்வெளி முழுதும் எமது மக்கள் வணக்கம் செய்ய நிறைந்தனர் சரியாக 6மணிக்கு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகின மக்கள் வெள்ளம்போல் வந்து அலை அலையாக தமது வணக்கத்தை செலுத்த வந்திருந்தனர் என்றும் காணாதவகையில் இந்த வணக்கநிகழ்விற்கு இளையோர்களே அதிகம் கலந்துகொண்டனர்.

தேசியத்தலைவர் கண்ட கனவு பலித்துவிட்டது என்றே பாராளுமன்றமுன்றலில் எண்ணத்தோன்றியது ங்குபார்த்தாலும் இளையவர்கள் தாம் எதுவரினும் எமது தாயகவிடுதலைக்காய் தோள்பொடுப்போம் என்று அனைத்துப்பணிகளையும் முன்னெடுத்து இந்த நிகழ்வை வணக்க நிகழ்வு என்பதைவிட ஒரு எழுச்சி பொங்க எழுச்சிநிகழ்வாகவே நடாத்தினர்.

வணக்க பீடத்தில் பொதுமக்களுக்கு ஓர் கல்லறையும் போராளிகளுக்கு துப்பாக்கி ஒன்று நிலத்தில் தலைகீழாக வைக்கப்பட்டு நடுவே தமிழீம் சுட்டிகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு தாயகத் தீ அணையாது என அர்த்தப்படுத்தப்பட்டது.

தாயத்தில் மக்கள் கொடுத்த உயிரும் மாவீரர்களின் தியாகமும் தாயகவிடுதலைக்காவே ஆதலால் எந்தத் தருணத்திலும் தாங்கள் இந்த விடுதலைத் தீயை அணைய விடமாட்டோம் என்றே அனைவரும் வணக்கம் செய்தது அங்கு நின்ற அனைவரையும் உருக்கமாக விடுதலையின்பால் இறுகச் செய்தது.

நள்ளிரவையும் தாண்டி மக்கள் தமது வணக்கத்தை உணர்வுடனும் உருக்கமாகவும் செய்து கொண்டிருக்க வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற சதுக்கத்தை சுற்றிவர மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு எங்கள் வேதனைகளையும் எமது உறுதியையும் காட்டுவது போல இருந்தது விடுதலையின் தீ.

புலத்தில் தொடர்ந்து கொழுந்துவிட்டெரியும் இந்தச் சுடர் தாயகத்தை மீட்க மக்களைக்காக்க என்றென்றும் எரியும் என்பதையே காட்டிநின்றது.



Related Posts with Thumbnails