பிரான்சில் அவசர ஒன்றுகூடல்: அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு
Posted 4:38 AM by S R E E in லேபிள்கள்: நிகழ்வுகள், போராட்டம்கடந்த 50 நாட்காளாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் " அடங்காப்பற்று" போராட்டத்தில், 26.05.09 செவ்வாய்க்கிழமை பி.பகல் 14.00 மணிமுதல் 18.00 மணிவரை பிரான்ஸ் UNESCO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களை கொன்றொழித்து, பல்லாயிரக்கணக்கானவர்களை அங்கவீனர்களாக்கிய
சிறிலங்கா இனவாத அரசினை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தக்கோரியும்,
தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசையான தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும்,
தமிழ்மக்களின் காப்பரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதித்திருக்கும் தடையை நீக்குமாறு கோரியும்,
மனிதாபிபமான பணியினை தமிழர் தாயகப்பகுதிகளில் சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் சுதந்திரமாகவும், உடனடியாகவும், பணிபுரிய அனுமதியளிக்க வேண்டும் என்று சிறீலங்கா அரசை சர்வதேச நாடுகள் வற்புறுத்த வேண்டும் எனக்கோரியும்
ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
அனைத்து தமிழ் மக்களையும் காலத்தின் தேவையை உணர்ந்து ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்
Lieu: UNESCO,
Place Fontenoy (75007 Paris)
: Metro. Segur (Ligne 10)
தமிழர் ஒருங்கிணைப்பு குழு
Tel: 06 11 72 59 78
---
0 comment(s) to... “பிரான்சில் அவசர ஒன்றுகூடல்: அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக