இலங்கை இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் சரண் அடைய முடிவு: கருணா புதிய தகவல்

Posted பிற்பகல் 9:47 by S R E E in லேபிள்கள்: ,
விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர்.

2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.Justify Full


0 comment(s) to... “இலங்கை இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் சரண் அடைய முடிவு: கருணா புதிய தகவல்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails