பிரித்தானியாவின் வரலாற்றை மாற்றி எழுதிய பாராளுமண்ற முன்றலில் நடைபெற்ற வணக்கநிகழ்வு

Posted AM 3:47 by S R E E in லேபிள்கள்: ,


பாராளுமண்றத்தின் முன் மக்கள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை அந்த உறவுகளுக்காய் இறுதிவரை போராடி மரணித்த உணர்வான தமது போராளிகளை என அனைவரையும் மனதிலே தாங்கி அந்த இழப்புகளை தாங்கமுடியாது விம்மி வெடித்து விழிநீரை வடித்தவண்ணம் பாராளுமண்ற சதுக்கத்தை நிறைத்தது.

கறுத்தகொடி விரித்ததுபோல புல்வெளி முழுதும் எமது மக்கள் வணக்கம் செய்ய நிறைந்தனர் சரியாக 6மணிக்கு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகின மக்கள் வெள்ளம்போல் வந்து அலை அலையாக தமது வணக்கத்தை செலுத்த வந்திருந்தனர் என்றும் காணாதவகையில் இந்த வணக்கநிகழ்விற்கு இளையோர்களே அதிகம் கலந்துகொண்டனர்.

தேசியத்தலைவர் கண்ட கனவு பலித்துவிட்டது என்றே பாராளுமன்றமுன்றலில் எண்ணத்தோன்றியது ங்குபார்த்தாலும் இளையவர்கள் தாம் எதுவரினும் எமது தாயகவிடுதலைக்காய் தோள்பொடுப்போம் என்று அனைத்துப்பணிகளையும் முன்னெடுத்து இந்த நிகழ்வை வணக்க நிகழ்வு என்பதைவிட ஒரு எழுச்சி பொங்க எழுச்சிநிகழ்வாகவே நடாத்தினர்.

வணக்க பீடத்தில் பொதுமக்களுக்கு ஓர் கல்லறையும் போராளிகளுக்கு துப்பாக்கி ஒன்று நிலத்தில் தலைகீழாக வைக்கப்பட்டு நடுவே தமிழீம் சுட்டிகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு தாயகத் தீ அணையாது என அர்த்தப்படுத்தப்பட்டது.

தாயத்தில் மக்கள் கொடுத்த உயிரும் மாவீரர்களின் தியாகமும் தாயகவிடுதலைக்காவே ஆதலால் எந்தத் தருணத்திலும் தாங்கள் இந்த விடுதலைத் தீயை அணைய விடமாட்டோம் என்றே அனைவரும் வணக்கம் செய்தது அங்கு நின்ற அனைவரையும் உருக்கமாக விடுதலையின்பால் இறுகச் செய்தது.

நள்ளிரவையும் தாண்டி மக்கள் தமது வணக்கத்தை உணர்வுடனும் உருக்கமாகவும் செய்து கொண்டிருக்க வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற சதுக்கத்தை சுற்றிவர மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு எங்கள் வேதனைகளையும் எமது உறுதியையும் காட்டுவது போல இருந்தது விடுதலையின் தீ.

புலத்தில் தொடர்ந்து கொழுந்துவிட்டெரியும் இந்தச் சுடர் தாயகத்தை மீட்க மக்களைக்காக்க என்றென்றும் எரியும் என்பதையே காட்டிநின்றது.





0 comment(s) to... “பிரித்தானியாவின் வரலாற்றை மாற்றி எழுதிய பாராளுமண்ற முன்றலில் நடைபெற்ற வணக்கநிகழ்வு”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails