சிறிலங்காவை காப்பாற்ற சீனா - இந்தியா கூட்டாக முயற்சி

Posted PM 11:17 by S R E E in லேபிள்கள்: ,
வன்னியில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானங்களை முறியடிப்பதற்கு சீனாவும் - இந்தியாவும் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவின் படை நடவடிக்கையின் வெற்றியை இந்தியா உட்பட 14 நாடுகள் பாராட்டியுள்ளதுடன், சிறிலங்கா மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கும் அவை தயாராகி வருகின்றன.

சிறிலங்கா மீதான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் எதிர்வரும் செவ்வாய்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 17 நாடுகளின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளும் இந்த 17 நாடுகளில் அடங்கும்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் ஆகியவற்றின் வேண்டுகோள்களை புறக்கணித்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comment(s) to... “சிறிலங்காவை காப்பாற்ற சீனா - இந்தியா கூட்டாக முயற்சி”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails