இலங்கை வரும் இந்திய குழுவில் தொல். திருமாவளவனும் உள்ளடங்குகிறார்

Posted பிற்பகல் 6:23 by S R E E in லேபிள்கள்: ,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் இலங்கை வரவுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவில் உள்ளடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குழு ஐந்து நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளைய தினம் இலங்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் 14 ம் திகதி வரையில் தங்கியிருக்கவுள்ள இந்த குழு, வடக்கின் முகாம்களுக்கு சென்று பார்வையிடவிருப்பதுடன், முக்கியஸ்தர்களையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவர்கள் மலையக பிரதேசங்களுக்கும் சென்று பார்வையிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்தக் குழுவில், இந்திய இராஜ்ய சபா உறுப்பினரான சுதர்ஷ்சன் நாச்சியப்பன், லோக்சபா உறுப்பினர்களான எஸ் வீ. சிட்டன், எஸ் அழகிரி, மற்றும் ஜே எம் ஆரோன் ரசீட் ஆகிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் லோக்சபா உறுப்பினர்களான டீ கே எஸ் இலங்கோவன், ஹெலன் டேவிட்சன், மற்றும் லோக்சபா நாடாளுமன்ற குழு தலைவர் ஏ கே எஸ் விஜயன் ஆகியோர் வரவுள்ளனர்.

அவர்களுடன் இராஜ்ய சபா உறுப்பினரான கனிமொழியும் இந்த விஜயத்தில் பங்கெடுக்கவுள்ளார்.

thanks : tamiwin

-


0 comment(s) to... “இலங்கை வரும் இந்திய குழுவில் தொல். திருமாவளவனும் உள்ளடங்குகிறார்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails