தமிழர்களிடையே பதட்டம்..

Posted பிற்பகல் 10:00 by S R E E in லேபிள்கள்: ,
கொழும்பில் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களில் தமிழ் வர்த்தகர்களின் விபரங்களை புலனாய்வுத்துறை சேகரித்து வருவதால் தமிழர்களிடையே பதட்டம். நிலவுகிறது. கொழும்பின் புறக்கோட்டை, கொம்பனிதொரு, வெள்ளவத்தை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கிராண்பாஸ், போன்ற பகுதிகளில் வர்த்தகம் புரியும் தமிழ் மக்கள் விபரங்களை திரட்டு வதற்காக இலங்கை புலனாய்வுத் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்படிவத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளரின் பெயர், விபரம், முகவரி, தொலைபேசி எண், வர்த்தகத்தின் தன்மை, அங்கு தொழில் புரிபவர்களின் பெயர், பாவிக்கப்படும் வாகனம், அதன் இலக்கம், காவல்துறை பதிவு, வர்தக பதிவு எண் போன்ற தரவுகளை திரட்டும் நடவடிக்கையாக இலங்கை புலனாய்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

இலங்கை படையினரின் இந்த செயலால் கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். போர் முடிவடைந்த நிலையில் இலங்கை படையின் இந்த பதிவுகளால் தமிழ் மக்களுக்கு ஏதும் ஏற்பட்டுவிட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வில் காணப்படுகிறார்கள்.
.


0 comment(s) to... “தமிழர்களிடையே பதட்டம்..”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails