பற்றி எரியும் இலங்கை - இன்று கொழும்பு விரைகிறார் பிரணாப்

Posted AM 10:40 by S R E E in லேபிள்கள்: ,



டெல்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பலர் பலியாகி வரும் சூழ்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு விரைகிறார்.

முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. ஆனால் தொடர்ந்து அப்பாவித் தமிழர்களை அது குறி வைத்துக் கொன்று குவித்து வருகிறது.

நேற்று நடந்த பயங்கரத் தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு விரைகிறார். அப்போது அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.

இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இறுந்தது.

இந்த நிலையில் அப்பாவித் தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் பின்னணியில், பிரணாப் கொழும்பு செல்லும் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




0 comment(s) to... “பற்றி எரியும் இலங்கை - இன்று கொழும்பு விரைகிறார் பிரணாப்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails