கிளிநொச்சியிலும் புலிகள் அதிரடி தாக்குதல் - 500 பேர் பலி என தகவல்

Posted AM 10:27 by S R E E in லேபிள்கள்:
வன்னி: விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளிநொச்சியிலும், தற்போது புலிகள், ராணுவத்தினரை வேட்டையாடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.அங்கு 500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

படு வேகமாக பதுங்கிய விடுதலைப் புலிகள் இப்போது கடும் சீற்றத்துடன் ராணுவத்தினர் மீது பாயத் தொடங்கியுள்ளனர். இரை வரும் வரை காத்திருந்து துரத்தியடித்துக் கொல்லும் புலிவேட்டைக்கு இணையானதுதான் இதுவும்.

முல்லைத் தீவுக் களமுனையில் இதுவரை பதுங்கல், பின் நகர்வு மற்றும் ராணுவ வெற்றிகளைப் பற்றிய செய்திகளை மட்டுமே கேட்டுவந்த மீடியாவுக்கு இப்போதுதான் முதல்முறையாக புலிகளின் வழக்கமான அதிரடித் தாக்குதல் குறித்த செய்தி கிடைத்துள்ளது.

முல்லைத் தீவின் முக்கிய பாசன அணைக்கட்டான கல்மடுக்குளத்தை வெடி வைத்துத் தகர்த்த புலிகள், அந்த பெரும் வெள்ளத்தில் திக்குமுக்காடிய இலங்கை ராணுவத்தை ஓடவிட்டு தாக்கிய வண்ணம் உள்ளனர். இந்தப் போரில் புலிகளின் கடற்புலிகளும் களமிறங்கி ராணுவ அணிகளை நிலை குலைய வைத்திருக்கிறார்கள்.

இன்னமும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திதான் இது. ஆனாலும் இலங்கை அரசையும், அதற்கு ஆதரவானவர்களையும் இந்த செய்தி அதிர வைத்துள்ளது.

ராணுவத் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிட இன்னும்கூட நேரமாகலாம் என்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்க தாமதமாகின்றன.

இந்த முறை புலிகள் பயன்படுத்தியிருப்பது யாரும் எதிர்பார்த்திராத புதிய யுத்தி. ஆனால் இதை, 'பாசன அணையை உடைத்து ராணுவத்தை நொறுக்கியது, புலிகளின் மோசமான போர் உத்தி' என கூறியுள்ளது இலங்கை ராணுவ அமைச்சகம்.

கிளிநொச்சியிலும் கடும்போர்!

இந்த நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் கிளிநொச்சியில் கடும் தாக்குதல்கதளை முதல்முறையாக புலிகள் நடத்தியுள்ளதாகவும் அங்கும் பல நூறு படையினர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 500 படையினர் பலியாகியிருக்கலாம் என்கின்றன உறுதிசெய்யப்படாத தகவல்கள்.

இதே வேளையில், புலிகளின் ஒரு பிரிவு யாழ்ப்பாண முனையிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பில்...

நேற்று கல்மடுக்குளம் தகர்க்கப்பட்ட நேரத்திலேயே, முல்லைத் தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் 26 ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது புலிகளின் ஒரு சிறிய பிரிவு. இந்தத் தாக்குதலில் 52 பேர் படுகாயமடைந்து ஓடியிருக்கிறார்கள். கல்மடுவில் நடந்த தாக்குதலில் 8 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பிலும் தொடரும் சண்டை!

கருணா கோஷ்டி மற்றும் அவர்களைப் பாதுகாத்து வரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதிகளிலும் புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பில் கடந்த ஒருவாரத்தில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 10க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும், போலீசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பதுங்குவது போல பதுங்கி விட்டு இப்போது விடுதலைப் புலிகள் தங்களது அதிரடி கொரில்லாத் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதால் இலங்கைப் படைகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு இது வாழ்வா சாவா கட்டம். கிடைக்கிற எந்த வாய்ப்பையும் அவர்களால் நழுவ விட்டுவிட முடியாது என்பதையே அணைக்கட்டுத் தகர்ப்பு நிரூபிப்பதாக உள்ளது.

ராணுவத் தரப்பை நன்கு உள்ளே வரவிட்டு, அணையை உடைத்து வெள்ள நீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் புலிகள். புலிகளின் முக்கிய தளபதிகள் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் தரைப் புலிகளுடன், புலிகளின் வலிமை வாய்ந்த கடற்புலிகளும் களமிறங்கியுள்ளார்களாம். நீரில் கடும் சண்டை போடுவதில் கடற்புலிகளுக்கு நிகரான ராணுவம் உலகில் இல்லை என்பது, இந்திய ராணுவமே சமீபத்தில் கூறியது என்பது நினைவிருக்கலாம்.

ஏற்கனவே ஒருமுறை முல்லைத்தீவை ராணுவத்திடம் இழந்த பின்னர் பிரபாகரன் தலைமையில் புலிகள் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டு அதைப் பிடித்தது நினைவிருக்கலாம். அந்த தாக்குதலில் 3000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை கல்மடுக்குள அணைக்கட்டு உடைப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை பற்றி பல்வேறுவிதமாகக் கூறப்படுகிறது. இன்னமும் புலிகள் தரப்பிலிருந்து அறிக்கை வராததால் மீடியா அமைதி காக்கிறது.

உறுதி செய்யப்படாத சில தகவல்கள், ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 5000 வரை இருக்கும் என்கிறது. 3631 ராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு அலுவலகம் கூறியுள்ளதாக சில தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களைத் தவிர நிறைய ராணுவத்தினரை புலிகள் சுற்றி வளைத்து சிறை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடமிருந்த மொத்த ஆயுதங்களையும் புலிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பல ஆயிரம் படைவீரர்கள் முல்லைத்தீவு முனையைவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

thagaval: thatstamil.com


0 comment(s) to... “கிளிநொச்சியிலும் புலிகள் அதிரடி தாக்குதல் - 500 பேர் பலி என தகவல்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails