இலங்கையினால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட பிரபாகரன் ‐ பொட்டம்மானின் மரணச் சான்றிதழ்களை இந்தியா மீண்டும் கோரியுள்ளது

Posted பிற்பகல் 3:14 by S R E E in லேபிள்கள்: , ,

கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குமாறும் மீண்டும் இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர இந்தியா பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணச் சான்றிதழ்களை ஏற்கனவே கோரியிருந்தது. இந்த மரணச்சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படாததால், இந்திய மீண்டும் அவற்றை கோரியுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலையின் முக்கிய குற்றவாளிகளாக பிரபாகரன் மற்றும் பொட்;டம்மான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

0 comment(s) to... “இலங்கையினால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட பிரபாகரன் ‐ பொட்டம்மானின் மரணச் சான்றிதழ்களை இந்தியா மீண்டும் கோரியுள்ளது”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails