சோனியாவின் தனிப்பட்ட கோபத்தால் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்: பாஜக

Posted முற்பகல் 8:06 by S R E E in லேபிள்கள்:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்தும், கச்சத்தீவை மீட்க கேட்டும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அலுவலகம் முன் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய மீனவர் பிரிவு தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தமிழக துணைத்தலைவர் ராஜா,

இலங்கையில் மின்சாரம் பாய்ச்சிய முள் வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.

இலங்கை அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு, கண்துடைப்புக்காக தற்போது குடியுரிமை பற்றி பேசுகின்றனர். இது ராஜபாக்சேவுக்கு உதவுவது போன்ற செயல். சோனியாவின் தனிப்பட்ட கோபத்தால் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர் என்றார்.0 comment(s) to... “சோனியாவின் தனிப்பட்ட கோபத்தால் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்: பாஜக”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails