வன்னிப் பெருநிலப்பரப்பில் 30 வீதம் சிங்களவரை குடியேற்ற அரசு திட்டம்

Posted PM 9:46 by S R E E in லேபிள்கள்:
இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் 30 வீதம் சிங்களவரை குடியேற்ற அரசு திட்டமி்ட்டதாலேயே மீள் குடியேற்றத்தை தாமதமாக்குது சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியதாவது, கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் எனக் கூறி மீள்குடியேற்றத்தை அரசு காலம் கடத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர்கள் தனித்து வாழக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் சிங்களவர்களும் குடியேற்றப்பட வேண்டும் என்ற சிந்தனையுடனேயே அரசு செயற்படுவதாகத் தெரியவந்திருப்பதாககவும் குறிப்பிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன், இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்களின் தாயகக் கோட்பாடு எழாது எனக் கருதி அரசு செயற்படுவதாகவும் கூறினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே முகாம்களில் உள்ள மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால், அங்கு ஒரு அங்குல நிலத்தில் கூட கண்ணிவெடிகளை அகற்றும் பணி இதுவரையில் தொடங்கப்படவில்லை. இந்த இடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு தம்மை அனுமதிக்குமாறு பல அனைத்துலக அமைப்புக்கள் அரசை கேட்டிருந்தபோதிலும் அதற்கான அனுமதி இதுவரையில் வழங்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது. இந்த மாவட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவே எதிர்காலத்தில் தமிழீழக் கோட்பாடு உருவாகாது என்ற கருத்துடனேயே அரசு செயற்படுகின்றது.

.


0 comment(s) to... “வன்னிப் பெருநிலப்பரப்பில் 30 வீதம் சிங்களவரை குடியேற்ற அரசு திட்டம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails