போர் நடந்த இடங்களை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி!

Posted 1:33 AM by S R E E in லேபிள்கள்: ,

தமிழர்கள் பகுதிகளில் மிக மிக மோசமான போரைத் தொடுத்த இலங்கை அரசு அப்பகுதிகளுக்கு செல்ல பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி தராமல் இருந்தது.

மேலும் இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களைப் போய்ப் பார்வையிடவும் மீடியாவை அனுமதிக்காமல் தடுத்து வந்தது.

ராணுவமும், அரசும் தரும் செய்திகளையும், அது தரும் படங்களையும் மட்டுமே பெற முடிந்தது. இதனால் உண்மை நிலவரம் வெளியுலகுக்குத் தெரியாமலேயே போய் விட்டது.

இந்நிலையி்ல நேற்று பான் கி மூன் வந்தபோது, அதியத்திலும் அதிசயமாக மீடியாக்களை தாராளமாக அனுமதித்தது இலங்கை அரசு .

பான் கி மூன் மானிக் பார்ம் முகாமுக்குப் போனபோது அவருடன் மீடியாவும் செல்ல அனுமதித்தது. அதேபோல ஹெலிகாப்டர் மூலம் போர் பாதித்த பகுதிகளைப் பான் கி மூன் பார்வையிட சென்றபோது மீடியாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.



0 comment(s) to... “போர் நடந்த இடங்களை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி!”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails