செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம்,

’’இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும். தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்க கூடாது.

இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபக்ஷவுக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது’’ என்றார் அவர்.

-

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேசும்போது, உலக நாடுகள் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும். இந்திய அரசு மவுனம் சாதிக்கிறது. தமிழகத்தின் தலைநகரில் அமர்ந்துகொண்டு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மிருகக்காட்சி சாலை அளவிற்கு ஒப்பிட்டு பேசக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு தெம்பு வந்துவிட்டது.


எனவே முள்கம்பி வேலிக்குள், அடைப்பட்டுக் கிடக்கும் மூன்று லட்சம் ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பவேண்டும். தமிழக மீனவர்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உறுதியளிக்கவேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும்வரை புதிய தமிழகம், இந்திய தவ்ஹித் ஜமா-அத், யாதவ மஹாசபை மற்றும் பன்னாட்;டு தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தொடர் போராட்டம் நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது என்றார்.

-

நீதியுடன் கூடிய துணிகர ஊடகவியலாளருக்கான, “பீட்டர் மெக்லர்” விருது திஸ்ஸநாயகத்திற்கு அமெரிக்காவில் வழங்கப்பட்டது.

நீதி நெறியுடன் கூடிய துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது முதல் முறையாக இலங்கை ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திஸ்ஸநாயகம் சார்பில் அவரது மனைவியான ரொன்னேட் திஸ்ஸநாயகம் தேசிய ஊடக கழகத்தில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தற்போது 20 வருட சிறைத்தண்டனைக்கு உட்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது அமெரிக்காவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது.திஸ்ஸநாயகம் சார்பில் அவரது மனைவியான ரொன்னேட் திஸ்ஸநாயகம் தேசிய ஊடக கழகத்தில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

பாரிஸைத் தளமாகக் கொண்ட ஊடக உரிமைகள் குழுவான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் உலக ஊடகமன்றமுமான இந்த நிறுவனத்தின் அமெக்க கிளையினால் திஸ்ஸநாயகம் இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிறுவனம் பிரபல ஊடகவியலாளர் பீட்டர் மெக்லரால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நோக்கம் சக மாற்றத்தை ஏற்படுத்த இலாபத்தைக் கருதாத வகையில் ஊடகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகும்.

இந்த வைபவத்தில் திஸ்ஸநாயகத்தின் மனைவி ரொன்னேட் கருத்துத் தெவிக்கையில்,

“எனது கணவர் கடந்த 20 வருட காலமாக பீட்டர் மெக்லன் குறிக்கோளான இலக்கை எட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஊடகத்துறையில் பீட்டரைப்போல பலருக்கு உதவி ஒத்தாசைகள் புந்து ஊடகத்துறையில் பயிற்சி பெறவும் எழுதவும் உதவியுள்ளார்.

கடினமான சூழ்நிலையிலும் துணிவுடன் நடந்து கொள்வது குறித்து இன்று என் கணவர் போதித்து வருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் இரக்கமற்ற செயல்களுக்கு அவரிடம் மன்னிப்பே கிடையாது. சக மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும் என்றார்.

இவ்வைபவத்தின் போது ஆரம்ப உரையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திகையின் நிர்வாக ஆசியர் மார்கல் புரோச்லி தெவிக்கையில், அடக்குமுறை ஆட்சி நிலவும் பிரதேசங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு தமது மரியாதையைச் செலுத்தினார்.

இவ்வாறு சிறந்த முறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களின் துணிகர செயற்பாடுகளுக்காக பீட்டர் மெக்லர் விருதினை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.

இதேவேளை, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயலணி, 2009 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதுக்கும் திஸ்ஸநாயகத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இலங்கைத் துணைத் தூதுர் கிருஷ்ணமூர்த்தி இடம் பெயர் முகாம்கள் மிருகக்காட்சிச் சாலை என்று கூறியதற்கு, திருமாவளவன், வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தான் அப்படி கூறவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் மிருகக்காட்சிச் சாலை என்று நான் கூறவில்லை. இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகையை இலங்கை அரசு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பெரிய பல்டியாக அடித்துள்ளார் இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.

சென்னைக்கு இலங்கை துணைத் தூதராக பதவியேற்றவுடனேயே வம்புடன் தனது வேலையைத் தொடங்கியுள்ளார் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.

பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஆளாளுக்கு வந்து பார்த்துப் போக இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ன மிருகக்காட்சி சாலையா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் M.P, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியாவை விட்டு அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் நான் அப்படிப் பேசவில்லையே என்று பல்டி அடித்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

இது குறித்து அவர் கூறுகையில், நான் உண்மையில் என்ன சொன்னேன் என்றால், முகாம்களில் வசிக்கும் மக்கள மரியாதைக்குரியவர்கள். அவர்களை அடிக்கடி சென்று சந்திப்பது, அதுவும் சர்ச்சைகள் நிலவி வரும் நேரத்தில் போய்ச் சந்திப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என்றுதான் கூறினேன்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதுதான் எனது முதல் பணி, முக்கிய பணி.

ஏற்கனவே இலங்கைக்கு தூதுக் குழுவை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்தக் குழுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார் கிருஷ்ணமூர்த்தி.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில் நீதியமைச்சு அறிக்கையொன்றை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில், கடுமையான குற்றங்களை மேற்கொண்டவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

குற்றச் செயல்களை வகையீடு செய்து அதற்கு ஏற்றவாறு தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்பில்லாத உறுப்பினர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகினர். நேற்றிரவு பரப்புக்கடந்தான் பகுதியூடாகப் பயணித்த மூன்று சிறீலங்கா படையினர் மீது தானியங்கித் துப்பாக்கி ஒன்றின் சகிதம் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருந்தன.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று சிறீலங்கா படையினரில் இரண்டு பேர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது.

டெல்லி: புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்திற்குள் புகுந்து நடத்திய தாக்குதலால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனத் தூதரகத்திற்குத் தரப்படுவதைப் போன்ற பலத்த பாதுகாப்பு தங்களது தூதரகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என அது கோரியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் சில மாதங்களுக்கு முன்பு லேசான தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியினர் துணிகர தாக்குதலை நடத்தியுள்ளனர். 40 முதல் 50 பேர் அடங்கிய புதிய தமிழகம் கட்சியினர் திடீரென தூதரகத்திற்குள் நேற்று புகுந்து நடத்திய தாக்குதலால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று ஜந்தர்மந்தர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நேற்று இலங்கைத் தமிழர்களை மறு குடியேற்றம் செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி வருவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், யாதவ மகாசபை ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் இல்லம் நோக்கி அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அதை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கூட்டத்திலிருந்து ஒரு பிரிவினர் அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குள் தடாலடியாக புகுந்தனர்.

அங்கு கண்ணில் பட்ட பொருட்களை தாக்கி சேதப்படுத்தினர். கல்வீச்சு நடத்தி கண்ணாடி ஜன்னல், கதவுகள், பூத்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.

அங்கு குறைந்த அளவே போலீஸார் பாதுகாப்புக்கு இருந்ததால் அவர்கள் சுதாரித்து வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், டிவி கேமராமேன்கள் படம் பிடித்தனர். அதைப் பார்த்த தூதரக அதிகாரிகள், அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்துமாறு போலீஸாரிடம் கூறினர். இதையடுத்து போலீஸார், பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்த முயன்றதால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தூதரகத்தில் குறைந்த அளவே ஊழியர்கள் இருந்ததால் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தால் தூதரக ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வருத்தம்...

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவிக்கையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தூதரகம் மீதான தாக்குதல் வன்முறைச் செயலாகும்.

தகவல் அறிந்ததும் போலீஸார் உடனடியாக பாதுகாப்புப் பணியில் இறங்கினர். தூதரக வளாகத்தில் தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு திபெத் போராட்டக்காரர்கள் சீனத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் டெல்லியில் ஒரு நாட்டுத் தூதரகம் மீது நடந்துள்ள தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து தூதரகத்தின் முதல் செயலாளர் குணரத்னே கூறுகையில், நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திடமும், டெல்லி காவல்துறையிடமும் எடுத்துக் கூறியுள்ளோம்.

40 முதல் 50 பேர் வரை தாக்குதல் நடத்தினார்கள். தமிழர்களைப் போல இருந்தார்கள். இலங்கை அரசைக் கண்டிக்கும் தட்டிகளை கையில் வைத்திருந்தனர்.

விடுமுறை என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லை. பல பூத் தொட்டிகளையும், கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாங்கள் வருவதற்குள் அனைவரும் தப்பி ஓடி விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி கூடுதல் ஆணையர் தாஸ் கூறுகையில், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. எல்லாமே 2 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. இதில் யாரும் காயமடையவில்லை. போலீஸார் சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டதால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் வரும்போதே, டிவி செய்தியாளர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். டிவி வீடியோ படங்களைப் பார்த்து தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம் என்றார்.


ஜெனீவா, மே. 28-

இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.

இதுபற்றி ஐ.நா. சபையில் மனித உரிமை குழு விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் முயற்சியால் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த 2 நாட்களாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது.

தொடக்கத்தில் இருந்தே தீர்மானத்துக்கு எதிராக அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது. இதேபோல சீனா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆதரித்தன.

நேற்று இரவு ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 17 நாடுகளும், எதிர்த்து இந்தியா உள்பட 22 நாடுகளும் ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

எனவே மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா.சபை மனித உரிமை குழு விசாரணை நடத்த தேவை இல்லை.

இந்த தீர்மானம் வந்ததுமே இலங்கை பல்வேறு நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. மனித உரிமை குழுவில் உறுப்பினராக உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா, கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 22 நாடுகள் இலங்கையை ஆதரித்து உள்ளன.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராக ஓட்டு போட்டன. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு போடக்கூடாது என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை புறக்கணித்து இந்தியா இலங்கையை ஆதரித்து உள்ளது.

இதே விவாதத்தின்போது இலங்கை தனது நாட்டு மறு சீரமைப்புக்கு சர்வதேச நாடுகளின் நிதி உதவியை கோரும் தீர்மானத்தையும் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஓட்டு போட்டன. ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. எனவே இலங்கைக்கு சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர் என அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும் தாய்லாந்து, மlலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன்விசாரணைகளை சர்வதேசப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இலங்கை அரசும், இந்திய அரசும் விடுத்த கோரிக்கையையடுத்தே கே.பியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேசப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர்.

2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.Justify Full

கொழும்பு, மே. 25-



விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் ஏற்கனவே அறிவித்தது. இதை விடுதலைப்புலிகள் சர்வதேச விவகார தலைவர் பத்மநாபன் மறுத்தார். மறுநாள் கொல்லப்பட்ட பிரபாகரன் உடலை இலங்கை ராணுவம் காட்டியது.

இதற்கு பின்பும் பத்மநாபன் மறுப்பு தெரிவித்தார். வேறு ஒருவர் உடலை காட்டி பிரபாகரன் என்று கூறுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் பத்மநாபன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் பிரபாகரன் இறந்து விட்டதை ஒத்துக்கொண்டார்.

ஆனால் இதற்கு விடுதலைப்புலிகளின் இணைய தளமான தமிழ்நெட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச விவகார தலைவர் பத்மநாபன் 17-ந்தேதி நடந்த போரில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக புலம் பெயர்ந்தோர் விடுதலைப்புலிகள் துறை தமிழ் நெட்டிடம் கூறியுள்ள தகவலில் விடுதலைப்புலிகள் தலைமையிடம் இருந்து உரிய ஆதார தகவல் வரும்வரை எதுவும் கூறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு உளவுத்துறை கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார்.

பிரபாகரன் இறந்ததற்கான உறுதியான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.
தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நக- : 91-44-2377 5537பழ.நெடுமாறன்ஒருங்கிணைப்பாளர்இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்களஅரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம்மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின்றன.

பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

தமிழர்கள் பகுதிகளில் மிக மிக மோசமான போரைத் தொடுத்த இலங்கை அரசு அப்பகுதிகளுக்கு செல்ல பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி தராமல் இருந்தது.

மேலும் இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களைப் போய்ப் பார்வையிடவும் மீடியாவை அனுமதிக்காமல் தடுத்து வந்தது.

ராணுவமும், அரசும் தரும் செய்திகளையும், அது தரும் படங்களையும் மட்டுமே பெற முடிந்தது. இதனால் உண்மை நிலவரம் வெளியுலகுக்குத் தெரியாமலேயே போய் விட்டது.

இந்நிலையி்ல நேற்று பான் கி மூன் வந்தபோது, அதியத்திலும் அதிசயமாக மீடியாக்களை தாராளமாக அனுமதித்தது இலங்கை அரசு .

பான் கி மூன் மானிக் பார்ம் முகாமுக்குப் போனபோது அவருடன் மீடியாவும் செல்ல அனுமதித்தது. அதேபோல ஹெலிகாப்டர் மூலம் போர் பாதித்த பகுதிகளைப் பான் கி மூன் பார்வையிட சென்றபோது மீடியாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு சென்றார்.

இலங்கையில் வவுனியாவில் போர் நடந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும், இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மானிக் பாம் அகதிகள் முகாமையும் அவர் பார்வையிட்டார்.

இதன் பின்னர், அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பான் கீ மூன் தீவிர ஆலோசனையும் நடத்தினார். இதன் பிறகு இரு தலைவர்களின் சார்பாகவும் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரது குறைகளை தீர்க்கவும், அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றவும், இலங்கையின் நீண்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண வாய்ப்புகளை உருவாக்கவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடக்காத வடக்கு இலங்கை பகுதியில் ஜனநாயக ரீதியான அமைப்பினை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக அங்கு தேர்தலை நடத்தி முடிக்கவும் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூனும், ராஜபக்சேவும் அந்த கூட்டறிக்கையில் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கு பகுதி மக்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகவும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிட்னி மாநகரில் தமிழீழ தாயகத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை எடுத்துக்காட்டுவதுடன் எமது மக்களுக்கு நிரந்தர நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிட்னி மாட்டின் சதுக்கத்தில் ஸ்டொப் த வோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று இந்த பேரணியை முன்னின்று ஏற்பாடு செய்திருந்தனர். சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல அவுஸ்திரேலியர்களும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வக்கீல் ஃபிலிப் போல்ட்டன், தேவாலய உறுப்பினர் ரெவ் ஜோன் ஃபார் இ ஸ்டொப் த வோர் சங்க உறுப்பினர் ஃபிப் கென்மன், National Territory Education உறுப்பினர் மைக்கல் தொம்சன், கிறீன் கவுன்சில் உறுப்பினர் கிரிஸ் கரிஸ், Edmund Rice Centre உறுப்பினர் ஃபில் கிலன்டனிங் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இளையோர்கள் மருத்துவர் சாம்பவி பரி அட்ரியன் ஃபிரான்சிஸ் மயூரன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.

இதில் உரையாற்றிய வக்கீல் ரெவ் ஜோன் ஃபார் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்படுத்திய கொலைத் தாக்குதல்கள் கொடுமைகள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார். கிறீன் கவுன்சில உறுப்பினர் கிரிஸ் கரிஸ் கிறீன் பார்ட்டி எமக்கு அதரவாக வெளியிட்ட அறிக்கையை வாசித்தார்

அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி கொடுப்பதன் மூலம் தமிழர்களின் அழிவுக்கு உதவுகிறார்கள் என்பதையும் இலங்கை அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழர்களின் அழிவுக்கு ஓரு காரணமாக இருப்பதை உரையாற்றிய அணைவரும் சுட்டிக்காட்டினர்.

உடனடியாக மருந்து மற்றும் உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச்சேர வேண்டும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்கள் உடனே வன்னிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் தடுப்பு முகாம்களில் இருக்கும் எமது உறவுகள் உடனே தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்படுகிறது

எமது மக்கள் சுதந்திரமாக வாழும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதில் எமது புலம்பெயர் மக்கள் திடமாக இருப்பதை பெரும்திரளாக வந்த மக்கள் கூட்டம் பிரதிபலித்தது. உறவுகளை இலந்த வலி மனதில் இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் சுயரூபத்தை வெளி உலகுக்கு காட்டி தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளை காப்பாத்தி அவர்களுக்கு சுதந்திரமான வாழ்வை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக வீதிகளில் இறங்கி போராட தயாராகிவிட்டார்கள்.

தனி தமிழீழமே நிரந்தரமான முடிவு என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

மாட்டின் சதுக்கத்தில் நடந்த நிகழ்வை தொடர்ந்து டவுன் கோல் வளாகத்தை நோக்கி “தமிழீழமே வேண்டும்”, “கெவின் ரோட் அழிவுக்கு துணை போக வேண்டாம்” என கோசங்கள் எழுப்பிய வண்ணம் பேரணியாக சென்றனர்.

அங்கு உரையாற்றிய தமிழ் இளையோர் தனி தமிழீழம் விரைவில் மலரும் அதற்கான ஏற்பாடுகளில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

ஒரு மாபெரும் தமழின அழிப்பை செய்து முடித்து விட்டு இன்று இழிநிலை வெற்றியை கொண்டாடுகிறது சிங்கள அரசு. இந்த நாளை உலகத்தமிழர்கள் துயரம் நிறைந்த கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

பிரான்சில் மக்கள் எழுர்ச்சிப்போராட்டம் இரவு பகலாகத்தொடர்ந்து 47வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை போரிலே சாவடைந்தவர்களுக்கான சுடர் வணக்கம் நடைபெறுவதோடு நேற்றய நாள் அடையாள உண்ணா நிலைப்போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.







பாராளுமண்றத்தின் முன் மக்கள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை அந்த உறவுகளுக்காய் இறுதிவரை போராடி மரணித்த உணர்வான தமது போராளிகளை என அனைவரையும் மனதிலே தாங்கி அந்த இழப்புகளை தாங்கமுடியாது விம்மி வெடித்து விழிநீரை வடித்தவண்ணம் பாராளுமண்ற சதுக்கத்தை நிறைத்தது.

கறுத்தகொடி விரித்ததுபோல புல்வெளி முழுதும் எமது மக்கள் வணக்கம் செய்ய நிறைந்தனர் சரியாக 6மணிக்கு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகின மக்கள் வெள்ளம்போல் வந்து அலை அலையாக தமது வணக்கத்தை செலுத்த வந்திருந்தனர் என்றும் காணாதவகையில் இந்த வணக்கநிகழ்விற்கு இளையோர்களே அதிகம் கலந்துகொண்டனர்.

தேசியத்தலைவர் கண்ட கனவு பலித்துவிட்டது என்றே பாராளுமன்றமுன்றலில் எண்ணத்தோன்றியது ங்குபார்த்தாலும் இளையவர்கள் தாம் எதுவரினும் எமது தாயகவிடுதலைக்காய் தோள்பொடுப்போம் என்று அனைத்துப்பணிகளையும் முன்னெடுத்து இந்த நிகழ்வை வணக்க நிகழ்வு என்பதைவிட ஒரு எழுச்சி பொங்க எழுச்சிநிகழ்வாகவே நடாத்தினர்.

வணக்க பீடத்தில் பொதுமக்களுக்கு ஓர் கல்லறையும் போராளிகளுக்கு துப்பாக்கி ஒன்று நிலத்தில் தலைகீழாக வைக்கப்பட்டு நடுவே தமிழீம் சுட்டிகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு தாயகத் தீ அணையாது என அர்த்தப்படுத்தப்பட்டது.

தாயத்தில் மக்கள் கொடுத்த உயிரும் மாவீரர்களின் தியாகமும் தாயகவிடுதலைக்காவே ஆதலால் எந்தத் தருணத்திலும் தாங்கள் இந்த விடுதலைத் தீயை அணைய விடமாட்டோம் என்றே அனைவரும் வணக்கம் செய்தது அங்கு நின்ற அனைவரையும் உருக்கமாக விடுதலையின்பால் இறுகச் செய்தது.

நள்ளிரவையும் தாண்டி மக்கள் தமது வணக்கத்தை உணர்வுடனும் உருக்கமாகவும் செய்து கொண்டிருக்க வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற சதுக்கத்தை சுற்றிவர மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு எங்கள் வேதனைகளையும் எமது உறுதியையும் காட்டுவது போல இருந்தது விடுதலையின் தீ.

புலத்தில் தொடர்ந்து கொழுந்துவிட்டெரியும் இந்தச் சுடர் தாயகத்தை மீட்க மக்களைக்காக்க என்றென்றும் எரியும் என்பதையே காட்டிநின்றது.






டெல்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பலர் பலியாகி வரும் சூழ்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு விரைகிறார்.

முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. ஆனால் தொடர்ந்து அப்பாவித் தமிழர்களை அது குறி வைத்துக் கொன்று குவித்து வருகிறது.

நேற்று நடந்த பயங்கரத் தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு விரைகிறார். அப்போது அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.

இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இறுந்தது.

இந்த நிலையில் அப்பாவித் தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் பின்னணியில், பிரணாப் கொழும்பு செல்லும் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வன்னி: விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளிநொச்சியிலும், தற்போது புலிகள், ராணுவத்தினரை வேட்டையாடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.அங்கு 500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

படு வேகமாக பதுங்கிய விடுதலைப் புலிகள் இப்போது கடும் சீற்றத்துடன் ராணுவத்தினர் மீது பாயத் தொடங்கியுள்ளனர். இரை வரும் வரை காத்திருந்து துரத்தியடித்துக் கொல்லும் புலிவேட்டைக்கு இணையானதுதான் இதுவும்.

முல்லைத் தீவுக் களமுனையில் இதுவரை பதுங்கல், பின் நகர்வு மற்றும் ராணுவ வெற்றிகளைப் பற்றிய செய்திகளை மட்டுமே கேட்டுவந்த மீடியாவுக்கு இப்போதுதான் முதல்முறையாக புலிகளின் வழக்கமான அதிரடித் தாக்குதல் குறித்த செய்தி கிடைத்துள்ளது.

முல்லைத் தீவின் முக்கிய பாசன அணைக்கட்டான கல்மடுக்குளத்தை வெடி வைத்துத் தகர்த்த புலிகள், அந்த பெரும் வெள்ளத்தில் திக்குமுக்காடிய இலங்கை ராணுவத்தை ஓடவிட்டு தாக்கிய வண்ணம் உள்ளனர். இந்தப் போரில் புலிகளின் கடற்புலிகளும் களமிறங்கி ராணுவ அணிகளை நிலை குலைய வைத்திருக்கிறார்கள்.

இன்னமும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திதான் இது. ஆனாலும் இலங்கை அரசையும், அதற்கு ஆதரவானவர்களையும் இந்த செய்தி அதிர வைத்துள்ளது.


ராணுவத் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிட இன்னும்கூட நேரமாகலாம் என்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்க தாமதமாகின்றன.

இந்த முறை புலிகள் பயன்படுத்தியிருப்பது யாரும் எதிர்பார்த்திராத புதிய யுத்தி. ஆனால் இதை, 'பாசன அணையை உடைத்து ராணுவத்தை நொறுக்கியது, புலிகளின் மோசமான போர் உத்தி' என கூறியுள்ளது இலங்கை ராணுவ அமைச்சகம்.

கிளிநொச்சியிலும் கடும்போர்!

இந்த நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் கிளிநொச்சியில் கடும் தாக்குதல்கதளை முதல்முறையாக புலிகள் நடத்தியுள்ளதாகவும் அங்கும் பல நூறு படையினர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 500 படையினர் பலியாகியிருக்கலாம் என்கின்றன உறுதிசெய்யப்படாத தகவல்கள்.

இதே வேளையில், புலிகளின் ஒரு பிரிவு யாழ்ப்பாண முனையிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பில்...

நேற்று கல்மடுக்குளம் தகர்க்கப்பட்ட நேரத்திலேயே, முல்லைத் தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் 26 ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது புலிகளின் ஒரு சிறிய பிரிவு. இந்தத் தாக்குதலில் 52 பேர் படுகாயமடைந்து ஓடியிருக்கிறார்கள். கல்மடுவில் நடந்த தாக்குதலில் 8 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பிலும் தொடரும் சண்டை!

கருணா கோஷ்டி மற்றும் அவர்களைப் பாதுகாத்து வரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதிகளிலும் புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பில் கடந்த ஒருவாரத்தில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 10க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும், போலீசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பதுங்குவது போல பதுங்கி விட்டு இப்போது விடுதலைப் புலிகள் தங்களது அதிரடி கொரில்லாத் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதால் இலங்கைப் படைகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு இது வாழ்வா சாவா கட்டம். கிடைக்கிற எந்த வாய்ப்பையும் அவர்களால் நழுவ விட்டுவிட முடியாது என்பதையே அணைக்கட்டுத் தகர்ப்பு நிரூபிப்பதாக உள்ளது.

ராணுவத் தரப்பை நன்கு உள்ளே வரவிட்டு, அணையை உடைத்து வெள்ள நீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் புலிகள். புலிகளின் முக்கிய தளபதிகள் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் தரைப் புலிகளுடன், புலிகளின் வலிமை வாய்ந்த கடற்புலிகளும் களமிறங்கியுள்ளார்களாம். நீரில் கடும் சண்டை போடுவதில் கடற்புலிகளுக்கு நிகரான ராணுவம் உலகில் இல்லை என்பது, இந்திய ராணுவமே சமீபத்தில் கூறியது என்பது நினைவிருக்கலாம்.

ஏற்கனவே ஒருமுறை முல்லைத்தீவை ராணுவத்திடம் இழந்த பின்னர் பிரபாகரன் தலைமையில் புலிகள் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டு அதைப் பிடித்தது நினைவிருக்கலாம். அந்த தாக்குதலில் 3000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை கல்மடுக்குள அணைக்கட்டு உடைப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை பற்றி பல்வேறுவிதமாகக் கூறப்படுகிறது. இன்னமும் புலிகள் தரப்பிலிருந்து அறிக்கை வராததால் மீடியா அமைதி காக்கிறது.

உறுதி செய்யப்படாத சில தகவல்கள், ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 5000 வரை இருக்கும் என்கிறது. 3631 ராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு அலுவலகம் கூறியுள்ளதாக சில தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களைத் தவிர நிறைய ராணுவத்தினரை புலிகள் சுற்றி வளைத்து சிறை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடமிருந்த மொத்த ஆயுதங்களையும் புலிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பல ஆயிரம் படைவீரர்கள் முல்லைத்தீவு முனையைவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

thagaval: thatstamil.com

Related Posts with Thumbnails