இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த "ஓசன் லேடி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார்.
எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
கனடிய பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலில் இருந்தவர்கள் மேலே பறந்து சென்ற ஹெலிகொப்டர் ஒன்றை பார்த்து கைகளை அசைத்ததை காணக் கூடியதாக இருந்தது என்றும் சிவில் உடைகளுடன் காணப்பட்ட அவர்களில் சிலர் சேர்ட் அணியாமல் நின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த தொல்.திருமாவளவன், யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து மக்களை சந்திப்பதற்கு இலங்கை இராணுவத்தினரிடம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து அவரது கோரிக்கையை இலங்கை இராணுவத்தினர் நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்தேசிய விடுதலைப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் ஈழ விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், பேரவையின் மாநிலச் செயலாளர் நீலவானத்து நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப், பேரவை மாவட்டச்செயலாளர்கள் சைதை தமிழ்செல்வன், சதாசிவம், தமிழ், தமிழ்குமரன், ஜெங்சங்கர், கலைஎழிலன், ஊஞ்சையரசன், கவுதம் சென்னா, முனைவர் மகாதேவன், வனச்செழியன், வெற்றி செல்வன், இரா.செல்வம், கடம்பன், இளங்கோ, விடுதலைச்செழியன், வீரமுத்து, புதுக்கோட்டை பாவாணன், சைதை ஜாக்கப், புதூர் தினகரன் உட்பட ஏராளாமனோர் பங்கேற்றனர்.

எனவே முள்கம்பி வேலிக்குள், அடைப்பட்டுக் கிடக்கும் மூன்று லட்சம் ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பவேண்டும். தமிழக மீனவர்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உறுதியளிக்கவேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும்வரை புதிய தமிழகம், இந்திய தவ்ஹித் ஜமா-அத், யாதவ மஹாசபை மற்றும் பன்னாட்;டு தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தொடர் போராட்டம் நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது என்றார்.
-
இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது.
போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரசியலில் அதீத நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார்.
காலச் சூழல் அதற்கு இடம்தராத நிலையிலும் கூட கடைசிவரை நிதானம் தவறாது மக்களுக்காகச் சேவை செய்தார்.
தமிழ்த் தேசியத்தின் விரோதிகள் அவரது பாதையைத் தடம்புரளச் செய்ய பல தடவைகளில் முயற்சி செய்தபோதிலும் கூட அது இறுதிவரை கைகூடவில்லை.
ஆசை வார்த்தைகள் கூறி அவரைத் தமது வலையில் சிக்க வைக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வளைந்து கொடுக்காத அவர் இறக்கும் வரை தான் கொண்ட கொள்கையில் வழுவாது இருந்தார்.
இறுதி மூச்சு வரை இலட்சியப் பற்றுடன் வாழ்ந்து மறைந்த அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது கவலையைக் காணிக்கையாக்குகிறோம். ஈழத் தமிழ் மக்கள் மனதில் அவரின் நாமம் நீங்காது நிலைத்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்
48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை
வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை
பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009
(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை
நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை
ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்க இருக்கிறார்.
அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு
ஆதரவு தெரிவிக்கவும்.
சர்வதேச சமூகத்தின்
கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு
வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்
-
இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).
கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்
தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444
சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.
நிர்வாக குழு
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
நிகழ்வின் படங்கள்
http://picasaweb.google.co.in/Earnestbrothers/tJYJTC#சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் தீர்மானம்
ஈழத் தமிழர் வாழ் வுரிமை மீட்பு இயக்கத் தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று (23.5.2009) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி அவர்களின் தலை மையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தொல். திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப. வீர பாண்டியன், பெருங் கவிக்கோ வா.மு. சேது ராமன், பொன். குமார், கவிஞர் மு. மேத்தா ஆகி யோர் கலந்துகொண் டனர்.
கீழ்க்கண்ட தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது.
1. ஈழத் தமிழர் களைக் காப்போம்! எனும் பொருளில் கீழ்க் கண்ட ஊர்களில் பேர ணியும், பொதுக்கூட்ட மும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு செய்யப் படுகிறது.
1.6.2009 மாலை சென்னை - சைதாப்பேட்டை தேரடி தெருவில் (பொதுக்கூட்டம் மட்டும்).
7.6.2009 மாலை திருச்சி - பேரணியும், பொதுக்கூட்ட மும்.
13.6.2009 மாலை மதுரை - பேரணியும், பொதுக் கூட்டமும்.
பேரணி, பொதுக் கூட்டத்தின் நோக்கங் கள் வருமாறு:-
1. ஈழ மண்ணில் உண வின்றியும், மருந்தின்றி யும் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பன் னாட்டுப் பார்வையா ளர்களின் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவிகள் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
2. சொந்தத் தேசத்தில் அகதிகளாக வாழும் அம்மக்களை, அவரவர் பகுதிகளில் மீள் குடி யேற்றம் செய்திட உலக நாடுகள் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3. தமிழின அழிப் பையே நோக்கமாகக் கொண்டு, தமிழீழ மக் களை அழித்தொழித்த (ழுநடிஉனைந) ராஜபக் சேயைப் போர்க் குற்ற வாளியாக உலக நீதிமன் றத்தில் நிறுத்தவேண்டும்.
4. தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பி னர் குழு ஒன்று, உட னடியாக இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண் டும்.
5. இலங்கைக்கான இந்தியத் தூதுவராகத் தமிழர் ஒருவரே உடன டியாக நியமிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர் மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.







