பிரதமர் மன்மோகன் சிங்குடன் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை தமிழர் நிலை குறித்து நேற்று அறிக்கை அளித்தனர்.
அவ்வறிக்கையை அளிக்க சென்ற குழுவில் விடுதலைச்சிறுத்தகைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்விண் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டதாக செய்திவெயிட்டுள்ளது.
தமிழ்விண் செய்தி
சென்னை கவர்னர் மாளிகையில், இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, கவர்னர் பர்னாலாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பின் அவர் கூறுகையில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேம்பட வேண்டும் என்ற நோக்கோடு, கவர்னர் பர்னாலாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
உறவுகள் மேம்பட தொடர்ந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என்றார். தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டது குறித்து கேட்டபோது, இது தொடர்பாக இலங்கை அரசிற்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்தது. யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள வதை முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை இக்குழு நேரில் சந்தித்தது. அத்துடன் தமிழினத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தது. மலையகப் பகுதிகளுக்கும் சென்று இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமைகளையும் இக்குழு ஆராய்ந்தது. நிறைவாக, சிங்கள ஆட்சியாளர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்தம் கருத்துக்களையும் அறிந்தது. 14Š-10Š-2009 அன்று மாலை சென்னை திரும்பிய இக்குழு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் தமது ஆய்வறிக்கையை அளித்தது. தமிழக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் முன்கூட்டியே பரப்பிவிட்ட அவதூறுகளுக்கு மாறாக, அந்த அறிக்கை ஈழத் தமிழர்களின் அவலங்களை உள்ளது உள்ளபடியே உண்மைகளை வெளிப்படுத்தியது. இக்குழு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இறுக்கம் நிறைந்த மமதைப் போக்கில் சிறிய அசைவும் தளர்வும் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்களையோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களையோ சர்வதேச அளவிலான மனிதஉரிமை ஆர்வலர்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இரும்புத் திரையிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை முதன்முறையாக இக்குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. வதைமுகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே இராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த Š அதிர வைத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தமது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும் இராணுவத்தின் கெடுபிடிகளும் வாய் திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா!'' என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர். இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு ஈழத்தில் நடக்கும் சிங்கள இராணுவ ஆட்சியின் அரச வன்கொடுமைகளை உலகரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு சிங்கள அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ. 500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வதைமுகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடித் தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.
அந்த வகையில் நெஞ்சிலே ஈரமில்லாத ஈவிரக்கமேயில்லாத சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, இராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும் சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 22-10--2009 அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் மனிதநேய ஆர்வலர்களும் மேற்சொன்ன இரு கோரிக்கைகளை மையப்படுத்தி சர்வதேசச் சமூகத்தை தொடர்ந்து வற்புறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல் .திருமாவளவன்
.
சென்னை டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் இயக்கம் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பேத்தி ரேவதி நாகராஜன், தமிழ்செல்வன், வேதமணி, அதியமான், உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
.
ஜெயலலிதா இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நலத்திற்கு கேடு செய்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சியில் தி.மு.க. நடத்திய அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானம், இங்கே அகதிகளாக வந்து அகதிகள் முகாம்களிலே வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நம்நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய அரசினை வற்புறுத்தும் தீர்மானம் ஆகும்.
இதனை உண்மையாகவே தமிழர்களுக்காக பரிவு காட்டுவோர் அனைவரும் வரவேற்பர். நடிப்புக்காக, ஒப்புக்காக தேர்தல் வெற்றி நப்பாசையைக் கொண்டு, தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்றெல்லாம் திடீரென்று அன்று வாய்ச்சவடால் அடித்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்கு பிறகு இதுபற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை.
ஆனால் இப்போது இந்த அம்மையார் மேற்கண்ட தீர்மானத்தால் ஈழத்தமிழர் அகதிகளுக்கு ஒரு பயனும் விளையாது என்று கூறி, தனது ஆற்றாமையை கலைஞர் மீதும், தி.மு.க. அரசு மீதும் உள்ள ஆத்திரத்தை காட்டி, தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இங்குள்ள நம் ஈழத்து சொந்தங்களுக்கு நாம் குடியுரிமை வாங்கித் தருவதன் மூலம் அவர்கள் உள்ளபடியே முகாம்களுக்குள்ள வேற்றாராக எண்ணாது அவரவர் பணி செய்து குடியுரிமை மூலம் நமக்குள்ள அத்துணை உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்கும் நிலையை உருவாக்கிடலாம்.
அவர்கள் தங்களது தாய் மண்ணிற்கு செல்ல விரும்பினால் அதற்குரிய சூழல் அங்கே வந்து அவர்கள் திரும்பிட எந்த தடையும் இல்லையே! எனவே பழைய பாட்டுபோல் என்ன? என்ன? என்ன? என்று கேட்பதன் மூலம் ஜெயலலிதா இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நலத்திற்கு கேடு செய்கிறார்.
இவரைபோல தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், அங்குள்ள முள்வேலித் தமிழர்களை பற்றி கவலைப்படாத போக்கு மாதிரி இதனை கண்டித்து அறிக்கை விடுப்பதும் மிகவும் தவறானது. எங்கு அரசியல் எதிலும் அரசியல்தானா? கலைஞரோ, தி.மு.க.வோ செய்தால் எல்லாம் தவறுதானோ!
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார்.
""கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடையாது. அந்த தீவில் மீன்வலை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும், மாதா கோவில் விழாவில் பங்கேற்கவும் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலையை பார்வையிட விரைவில் எம்.பி.,க்கள் குழு அனுப்பப்படும்,'' என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.டில்லியில் தமிழக பத்திரிகையாளர்களிடம் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் நேற்று பேசும்போது, இலங்கை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இந்த விஷயங்கள் குறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப் பட்டுள்ளன. மேலும், போர் நடந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் தான் மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கை தாமதமாகிறது. கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படும் வரை, குடியேற்றத் திற்கு சாத்தியமில்லை. கண்ணிவெடி அகற்றப்படுவது குறித்த காலக்கெடு எதுவும் கூறிவிட முடியாது. முகாம்களை பார்வையிட எம்.பி.,க்கள் குழு செல்வது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கை. அரசியல் கட்சித் தலைவர்களா எல்லது எம்.பி.,க்களா அல்லது எம்.எல்.ஏ.,க்களா என்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு மூன்று உரிமைகள் தான் உள்ளன. மீனவர்கள், கச்சத்தீவில் வலையை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வெடுத்துக் கொள்ளலாம், அங்குள்ள மாதா கோவில் விழாவில் பங்கேற்கலாம். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை வழங்கப்படவில்லை. மீன்பிடித்தல் தொடர்பாக இந் தியா போட்டுள்ள ஒப்பந்தப்படி தற்போது அனைத்து நடவடிக்கைகளும் கையாளப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டன. ஒரு சில உயிரிழப்புகள் நடந்தன. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழர்களை அவரவர் இடங்களில் குடியேற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசும், தமிழர்கள் பிரதிநிதிகளும் பேசிக் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் இந்தியா தரப்பில் போதிய ஒத்துழைப்பும் உதவியும் மட்டுமே வழங்க முடியும்.
ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கையும் இணைக்க வேண்டும். ஆனாலும் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வசித்துவந்த பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் நடக்கிறது என்பதை ஏற்கமுடியாது. இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
thanks : dinamalar
தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கும் போது, எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் என்னுடைய தலை யீடு அவசியமாகிறது.
மு.க. ஸ்டாலின் தன்னுடைய தீர்மானத்தில், 1984 முதல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என தனது தந்தைக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழர்கள் அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும் என்று மத்திய அரசு பிரகடனம் செய்வதன் மூலம், தமிழ்மொழி “செம் மொழி” பிரகடனத்தைப்போல் கூடுதலாக எந்தப்பயனும் இலங்கைத்தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை.
‘நிரந்தரக் குடியுரிமை’ என்ற தகுதி காரணமாக அவர் களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களிலிருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவி அவர்களுக்கு அளிக்கப்படுமா? உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கின்ற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்? இல்லையெனில், 1960-ஆம் ஆண்டு சிரிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின் படி, அகதிகளாக இந்தியாவிற்கு வந்து, இன்று இந்தியாவில் கொத்தடிமைகளாக அருவருக்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான “இந்திய வழி தமிழர்களை” விட கூடுதல் முன்னேற்றம் கிடைக்குமா?
இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், பங்களா தேஷ், பர்மா (மியன்மார்) மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக்குடியுரிமை தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்?
இவை எல்லாம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். இவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பதும் இவருக்கு நன்கு தெரியும். இருப்பினும், தனது மகன் மூலம் இந்தப்பிரச்சினையை எழுப்பி, இது “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக்கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். சொந்த மண்ணில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக இலங்கையில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை தகுதி அளிக்கப்பட வேண்டும் என்று தன்னிச்சையாக தனக்கே உரிய பாணியில் கருணாநிதி அறிவித்திருப்பது, 1950-களில் ‘சிங்களர்கள் மட்டும்‘, மற்றும் ‘தரப்படுத்தல்’ கோட்பாடுகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தை கொச்சைபபடுத்தும் விதமாக அமைந் துள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்தேசிய விடுதலைப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் ஈழ விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், பேரவையின் மாநிலச் செயலாளர் நீலவானத்து நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப், பேரவை மாவட்டச்செயலாளர்கள் சைதை தமிழ்செல்வன், சதாசிவம், தமிழ், தமிழ்குமரன், ஜெங்சங்கர், கலைஎழிலன், ஊஞ்சையரசன், கவுதம் சென்னா, முனைவர் மகாதேவன், வனச்செழியன், வெற்றி செல்வன், இரா.செல்வம், கடம்பன், இளங்கோ, விடுதலைச்செழியன், வீரமுத்து, புதுக்கோட்டை பாவாணன், சைதை ஜாக்கப், புதூர் தினகரன் உட்பட ஏராளாமனோர் பங்கேற்றனர்.
அப்போது அவர், ’'ராகுல்காந்தியை விமர்சனம் செய்ய வைகோவுக்கு அருகதை இல்லை. அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார். பின்னர் புலியாக மாறினார். தற்போது பூனையாக இருக்கிறார்.
எனவே வைகோவுக்கு ராகுலை விமர்சிக்க தகுதி இல்லை.
இலங்கையில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ளனர். அவர்கள் சொந்த இடத்திற்கு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் கூறியது போல் தூதுக்குழுவை மத்திய அரசு அனுப்ப உள்ளது.
தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் விரும்பினால் இந்திய குடியுரிமை கொடுக்கலாம். தீவிரவாதிகள், விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு குடியுரிமை கொடுக்காது’’என்று கூறினார்.
இலங்கையில் உள்ள அகதிகள் முகாம் மிருகக்காட்சியல்ல - எல்லோரும் பார்க்க! என்று ஆணவமாகவும், இழிவாகவும் பேட்டியளித்த இலங்கைத் துணைத் தூதரை வெளியேற்றுக! இந்திய அரசுக்குத் திராவிடகழக தலைவர் வீரமணி வேண்டுகோள்
இலங்கை முகாம் களில் முடக்கப்பட் டுள்ள ஈழத் தமிழர் களை நேரில் சந்திக்க வும், முகாம்களைப் பார்வையிடவும் அனு மதிக்கவேண்டும் என்ற வேண்டு கோளைக் கொச்சைப் படுத்தி, ஆணவமாகப் பேட்டியளித்த இந்தி யாவுக்கான இலங் கைத் துணை தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை இந்திய அரசு உடனடியாக வெளியேற்ற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த முதல் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல உள்ளது.
மிருகக் காட்சி சாலையா?
இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க அனுமதி அளிக்கவேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள். நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையா நடத்துகிறோம்; பார்வையாளர்களை அனுமதிக்க? என்று எதிர்க்கேள்வியைப் போட்டுள்ளார்.
இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அய்.நா. செயலாளர் போன்றவர்கள் எல்லாம் (ஏன், இந்து ராம் கூட) சென்று பார்த்தார்களே, அவர்கள் பார்த்தது மிருகக்காட்சி சாலைதானா?
மறைமுகமான ஒப்புதலே!
ஒரு வகையில் மறைமுகமாக இலங்கைத் துணைத் தூதர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கை முகாம்களில் ஈழத் தமிழர்கள் மிருகங்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்று உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளது. அதனை வேறு வகையில் ஒப்புக்கொண்டுள்ளார் என்றே இதனைக் கருதவேண்டும்.
ஒரு பொறுப்புள்ள அதிகாரியின் பேட்டியாக அது அமைந்திடவில்லை. ஆணவமும், அதிகார வெறியும், சிங்கள வெறித்தனத்தின் பிரதிபலிப்பும்தான் இதில் பொங்கி வழிகிறது!
தமிழக மீனவர்களைத் தாக்கவில்லையாம்!
அதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதாக வெளிவருவது எல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளாம். தமிழக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனவாம். இலங்கை _ இந்திய உறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல் என்றும் கூறி இருக்கிறார்.
இதைவிட அபாண்டமான பொய் ஒன்றும் இருக்க முடியாது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் பலியானதெல்லாம் எப்படி பொய்யாக, புனைந்துரையாக இருக்க முடியும்? இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டதெல்லாம் எப்படி கற்பனையானதாக இருக்க முடியும்?
பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்று இலங்கை தரப்பில் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
கச்சத்தீவுபற்றியும் ஆணவப் பேட்டி
கச்சத்தீவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதும், அது இலங்கையின் ஒரு பகுதி என்றும், கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இருக்கிறதா, இல்லையா? என்பதை விவாதிக்க இடமில்லை என்றும், வேண்டுமானால், உங்கள் அரசைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கேலியாகவும், குத்தலாகவும் பதில் சொல்லியிருக்கிறார்.
பல வகைகளிலும் இலங்கை அரசு இந்தியாவை அவமானப்படுத்தி வருகிறது.
இப்பொழுது ஒரு துணைத் தூதுவரே ஏளனமும், கேலியும் செய்யும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.
இலங்கைத் தூதரை வெளியேற்றுக!
இந்த அதிகாரியின் பேட்டியை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு உடனடியாக இவரை வெளியேற்றவேண்டும். இதன்மூலம் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.
இலங்கைக்குத் தூதராக ஒரு தமிழர்
நாம் நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் இலங்கையில், இந்தியாவுக்கான தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும். இதுதான் சரியான பதிலடியாகக் கூட இருக்க முடியும்.
தமிழர்களின் வேண்டுகோள்
குட்டைக் குட்டக் குனிந்து கொடுக்கும் இந்தியாவின் போக்கில் மாறுதல் தேவை_ இது ஒட்டுமொத்தமான உலகத் தமிழர்களின் வேண்டுகோளாகும்.
தலைவர்,
திராவிடர் கழகம்.
ஈழத்தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமையான யாழ்ப்பானம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதை ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும். ராஜராஜ சோழன், பல்லவர்கள் ஆட்சி காலங்களில் முல்லைத்தீவு வரை முழுமையான தமிழர்களின் பகுதியாக உருவாக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துச்சொல்லுகின்றன.
7 லட்சம் ஈழத்தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மேலும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
இம்மக்களின் சொத்துக்கள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்விக் கூடங்கள் போன்றவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
இதில் எவ்வளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு இராஜபக்சேவுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகமாகும். அந்த அளவிற்கு சிங்களவர்களை ஈழப்பகுதிகளில் குடியமர்த்த முயற்சிப்பார்கள்.
இதை கவனமாக கொண்டு இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
சிறீலங்காத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
-
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடந்தபோது, ஈவு இரக்கமின்றி அப்பாவித் தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர்.
கடைசி நாட்களில் நடந்த தாக்குதல்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
முல்லைத்தீவு பகுதியில் கொத்துக் குண்டுகளுக்கு தமிழர்கள் பலியானதை அமெரிக்கா தன் உளவு சாடிலைட் மூலம் படம் பிடித்துள்ளது. அந்த படங்களை ஆதாரமாக வைத்து இலங்கை மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறி உள்ளது.
இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சர்வதேச அளவில் இலங்கை ஆதரவு திரட்டி வருகிறது. ரஷியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் தீர்மானம் தங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது போல உள்ளது என்று இலங்கை கூறி உள்ளதால், இந்த விவகாரத்தில் இந்தியாவும், இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, அந்த நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், எல்லை ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் கூட, தற்போது இலங்கை விவகாரத்தை ஒரு சிறப்பு அம்சமாக கருத வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணம் உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்களிடம் எழுந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
இதற்கிடையே ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் பற்றி இன்று ஆய்வு நடந்தது. இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க ஒரு ஆணையம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
மாலைமலர்



