விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு குடியுரிமை கொடுக்காது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Posted பிற்பகல் 7:33 by S R E E in லேபிள்கள்: ,
முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கோவை அருகே உள்ள இருகூர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், ’'ராகுல்காந்தியை விமர்சனம் செய்ய வைகோவுக்கு அருகதை இல்லை. அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார். பின்னர் புலியாக மாறினார். தற்போது பூனையாக இருக்கிறார்.

எனவே வைகோவுக்கு ராகுலை விமர்சிக்க தகுதி இல்லை.


இலங்கையில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ளனர். அவர்கள் சொந்த இடத்திற்கு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் கூறியது போல் தூதுக்குழுவை மத்திய அரசு அனுப்ப உள்ளது.

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் விரும்பினால் இந்திய குடியுரிமை கொடுக்கலாம். தீவிரவாதிகள், விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு குடியுரிமை கொடுக்காது’’என்று கூறினார்.0 comment(s) to... “விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு குடியுரிமை கொடுக்காது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails