செல்வராசா பத்மநாதனிடம் விசாரனை நடத்த இந்தியாவுக்கு அனுமதி இல்லை: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு

Posted PM 7:34 by S R E E in லேபிள்கள்:

செல்வராசா பத்மநாதனிடம் விசாரனை நடத்த இந்தியாவுக்கு அனுமதி இல்லை: இலங்கை திட்டவட்டம்

விடுதலைப்புலிகளின் தலைமை செயலாளரும், அனைத்துலக உறவுகளுக்கான செயலாளருமான செல்வராஜா பத்மநாதன் கடந்த ஆகஸ்டு மாதம் 10ந் தேதி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கையின் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கான ஆயுத வர்த்தகம், நிதி உதவி சேகரித்தல், அனைத்துலக தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள சதி குறித்து பத்மநாதனிடம் விசாரணை நடத்த இந்திய புலனாய்வு துறையினர் விருப்பும் தெரிவித்தனர்.

ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பத்மநாதன் இந்தியா வந்து சென்றார். இதை தொடர்ந்து ராஜீவ் கொலையாளிகளுக்கு பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். எனவே விசாரணைக்காக பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அனைத்துலக ரீதியாக விடுதலைப்புலிகள் ஆயுத வர்த்தகம் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே இதுகுறித்து அவரிடம் விசாரிக்க அனுமதி கேட்டும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை பத்மநாதனிடம் விசாரணை நடத்த அனுமதிப்பதில்லை என இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அவரிடம் இலங்கை அரசின் விசாரணை முடிந்து சட்ட நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இது குறித்து முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comment(s) to... “செல்வராசா பத்மநாதனிடம் விசாரனை நடத்த இந்தியாவுக்கு அனுமதி இல்லை: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails