ஈழ விடுதலைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி இறுதி மூச்சு வரை போராடும் - தொல்.திருமா

Posted பிற்பகல் 2:25 by S R E E in லேபிள்கள்: ,
இலங்கை வதை முகாம்களில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரியும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை கண்டித்தும், சென்னையில் (2009-10-06 )ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தமிழ்தேசிய விடுதலைப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் ஈழ விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், பேரவையின் மாநிலச் செயலாளர் நீலவானத்து நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப், பேரவை மாவட்டச்செயலாளர்கள் சைதை தமிழ்செல்வன், சதாசிவம், தமிழ், தமிழ்குமரன், ஜெங்சங்கர், கலைஎழிலன், ஊஞ்சையரசன், கவுதம் சென்னா, முனைவர் மகாதேவன், வனச்செழியன், வெற்றி செல்வன், இரா.செல்வம், கடம்பன், இளங்கோ, விடுதலைச்செழியன், வீரமுத்து, புதுக்கோட்டை பாவாணன், சைதை ஜாக்கப், புதூர் தினகரன் உட்பட ஏராளாமனோர் பங்கேற்றனர்.


0 comment(s) to... “ஈழ விடுதலைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி இறுதி மூச்சு வரை போராடும் - தொல்.திருமா”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails