சிறீலங்கா தூதரின் போக்கு தமிழக மக்களை அவமதிக்கின்றது: நெடுமாறன்

Posted பிற்பகல் 9:41 by S R E E in லேபிள்கள்:
இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருக காட்சி சாலை அல்ல என இலங்கை துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்திய எம்.பி.க்களை கொண்ட குழுவை முகாம்களை பார்வையிட அனுப்ப வேண்டும் என்று முதல் அமைச்சர் கோரிக்கை எழுப்பியிருக்கிற வேளையில், அதை ஏளனம் செய்துள்ள துணைத் தூதரின் போக்கு முதல்வரை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் போக்காகும்.

எனவே அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என முதலமைச்சர் இந்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.0 comment(s) to... “சிறீலங்கா தூதரின் போக்கு தமிழக மக்களை அவமதிக்கின்றது: நெடுமாறன்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails