இலங்கை தூதரை திருப்பி அனுப்ப வேண்டும்: திருமா
Posted 9:32 PM by S R E E in லேபிள்கள்: அறிக்கை, ஈழ செய்திகள், தமிழகச் செய்திகள், தமிழர்கள்கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறிய இலங்கைத் துணைத் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும்எ ன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை. கச்சத்தீவு முற்று முழுதாக இலங்கைக்குச் சொந்தமான பகுதி. தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க உரிமையில்லை. இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம் என்று கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும் வலைகளை உலர்த்தவும் அனுமதித்து இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இதனை மறைத்து, உள்நோக்கத்துடன் பேசியுள்ள துணைத் தூதரை விடுதலைச் சிறுத்தைகள் மிக வண்மையாக கண்டிக்கிறது.
அத்துடன் முட்கம்பி வேலி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விலங்குகள் போல் சித்தரித்துப் பேசியதற்கும் அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இந்திய - இலங்கை கடல் எல்லை மற்றும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை கூறி இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை இந்திய அரசு மிக்க கடுமையாக கண்டிக்க வேண்டும்.
இந்திய அரசு அவரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comment(s) to... “இலங்கை தூதரை திருப்பி அனுப்ப வேண்டும்: திருமா”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக