சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்டது தமிழர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாகும்: ராமதாஸ்
Posted 9:42 PM by S R E E in லேபிள்கள்: தமிழகச் செய்திகள்சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கச்சத்தீவு தொடர்பாக தமிழகத்தில் உள்ள சிறீலங்காத் துணைத் தூதர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.
இலங்கை தமிழர்களை காட்டிக்கொடுப்பதற்கு கருணா, பிள்ளையான் இருப்பது போல இங்கு அவர்களின் பிரதிநிதியாக வேவு பார்ப்பதற்கு சிறீலங்கா துணைத் தூதர் தேவையில்லை. அவரை மத்திய அரசு வெளியேற்ற வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் வெளியேற்ற மாட்டார்கள்.
டெல்லியில் சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்டது தமிழர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாகும். அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான கோபம் எரிமலையாக கனன்று கொண்டு இருக்கிறது என்றார்.
0 comment(s) to... “சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்டது தமிழர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாகும்: ராமதாஸ்”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக