அனைத்துச் கட்சியினரும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் - கிருஷ்ணசாமி

Posted முற்பகல் 11:35 by S R E E in லேபிள்கள்: ,
இலங்கையில் முள்வேலிக்குள் முடங்கிக்கிடக்கும் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களுக்கு அனுப்ப அனைத்துச் கட்சியினரும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை திட்டம் தேவையற்றது என்று கருத்துத் தெரிவித்தார்.

தற்போதைக்கு இலங்கையில் முள்வேலிக்குள் முடங்கிக்கிடக்கும் தமிழர்களை மீட்டெடுத்து அவர்களை இருப்பிடங்களுக்கு அனுப்ப ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக பன்னாட்டு தமிழர் மையத்தின் சார்பில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
.


0 comment(s) to... “அனைத்துச் கட்சியினரும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் - கிருஷ்ணசாமி”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails