அனைத்துக் கட்சிக்குழு 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Posted முற்பகல் 11:06 by S R E E in லேபிள்கள்: ,
தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு அனைத்துக் கட்சிக்குழு அனுப்பப்படுகிறது. இந்தகுழு வரும் 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களை முள் வேலிக்குள் வைத்து சிங்கள அரசு சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வலியுறுத்தப்பட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மு.கஸ்டாலின் தலைமையில் ஒரு குழு இலங்கை செல்லும் என கூறுப்படுகிறது.

அந்த குழு வருகிற 10 ஆம் தேதி இலங்கை செல்கிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பினை, மத்திய அரசினை இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

.


0 comment(s) to... “அனைத்துக் கட்சிக்குழு 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails