ராணுவத்தின் பிடியில் பொட்டு அம்மான்? விடுதலைப்புலிகள் சந்தேகம்

Posted AM 12:24 by S R E E in லேபிள்கள்:
கொழும்பு, மே. 26-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது, அவருடன் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மானையும் கொன்று விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் பொட்டு அம்மானின் உடல் எதையும் வெளி உலகுக்கு சிங்கள ராணுவம் காட்டவில்லை. விடுதலைப்புலிகள் தரப் பில் இது பற்றி கூறுகையில், பிரபாகரனுடன் சேர்ந்து பொட்டு அம்மானும் தப்பிச்சென்று விட்டார் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு பொட்டு அம்மான் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சிங்கள ராணுவத்தின் பிடியில் பொட்டு அம்மான் இருக்கலாம் என்று விடுதலைப்புலிகளிடம் சந்தேகம் எழுந்துள்ளது. கடைசி கட்ட போர் நடக்கும் போது பொட்டு அம்மான் ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த பொட்டு அம்மானுக்கு வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அதிக தொடர்பு உண்டு. வெளிநாடுகளில் விடு தலைப்புலிகளை ஊடுருவச்செய்து கிளைகளை தொடங்க செய்ததும் பொட்டு அம்மான்தான்.

எனவே எந்தெந்த நாடுகளில் புலிகளின் கிளைகள் உள்ளன? அங்கு யார்-யார் பொறுப்பாளர்களாக உள்ளனர்? எப்படி ஆயுதம் கடத்தி வரப்படுகிறது? என்பது போன்ற தகவல்களை பொட்டு அம்மான் மூலம் தெரிந்து கொள்ள சிங்கள ராணுவம் தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ரகசிய இடம் ஒன்றில் பொட்டு அம்மான் சிறை வைக்கப்பட்டு இந்த விசாரணை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மூலம் : மாலைமலர்



2 comment(s) to... “ராணுவத்தின் பிடியில் பொட்டு அம்மான்? விடுதலைப்புலிகள் சந்தேகம்”

2 கருத்துகள்:

அருண்மொழி சொன்னது…

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html



Unknown சொன்னது…

ராணுவத்தின் "பிடியில்" பொட்டுஅம்மான் இல்லை!!
நான் அறிந்தவரையில் ராணுவத்துடன் பொட்டுஅம்மானிருப்பதாக தகவல். சில நாட்கள் பொறுங்கள் மீதி தகவல் வெளிவரும்



கருத்துரையிடுக

Related Posts with Thumbnails