இந்தோனேசியாவில் கைதான இலங்கை அகதிகள் மோசமான நிலையில் உள்ளனர்: இந்தோனேசியா கடற்படை தகவல்
Posted 1:05 PM by S R E E in லேபிள்கள்: ஈழ செய்திகள், ஈழம்இந்தோனேசிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் அதிக நாட்கள் கடலில் பயணித்தமையால் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக இந்தோனேசிய கடற்படை தகவல் திணைக்களத்தின் தலைவர் அட்மிரல் ஸ்காண்டர் சிட்டொம்புல் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட 260 அகதிகளுள், 30 பெண்களும், 30 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதாக பயணிக்கும் போதே கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை கைதானவர்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணைகளின் பின்னர், பெரும்பாலும் நளைய தினம் இந்தோனேசிய இடம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தனித்தனியே முதலில் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியாவிற்கு சென்று, பின்னர் ஆட்கடத்தல் முகவர்களால் ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் ஏற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
அவர்கள் நீண்ட நாட்கள் கடல்பயணத்தில் இருந்ததால், உணவு இன்றி அவஸ்த்தைப்பட்டதாகவும், அவர்கள் மீட்கப்படும் போது, அவர்களுள் பலர் போசாக்கின்மையாக காணப்பட்டதாகவும், பலருக்கு தோல் சம்பந்தமான நோய்கள் காணப்பட்டதாகவும் இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
0 comment(s) to... “இந்தோனேசியாவில் கைதான இலங்கை அகதிகள் மோசமான நிலையில் உள்ளனர்: இந்தோனேசியா கடற்படை தகவல்”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக