குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத புலி உறுப்பினர்களை விடுதலை செய்யத் திட்டம்.

Posted 5:59 PM by S R E E in லேபிள்கள்:
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில் நீதியமைச்சு அறிக்கையொன்றை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில், கடுமையான குற்றங்களை மேற்கொண்டவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

குற்றச் செயல்களை வகையீடு செய்து அதற்கு ஏற்றவாறு தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்பில்லாத உறுப்பினர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


0 comment(s) to... “குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத புலி உறுப்பினர்களை விடுதலை செய்யத் திட்டம்.”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails