தமிழக கவர்னருடன் இலங்கை தூதர் சந்திப்பு

Posted முற்பகல் 11:29 by S R E E in லேபிள்கள்: , ,

சென்னை கவர்னர் மாளிகையில், இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, கவர்னர் பர்னாலாவை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின் அவர் கூறுகையில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேம்பட வேண்டும் என்ற நோக்கோடு, கவர்னர் பர்னாலாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.

உறவுகள் மேம்பட தொடர்ந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என்றார். தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டது குறித்து கேட்டபோது, இது தொடர்பாக இலங்கை அரசிற்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.0 comment(s) to... “தமிழக கவர்னருடன் இலங்கை தூதர் சந்திப்பு”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails