சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும்
Posted 2:35 PM by S R E E in லேபிள்கள்: ஈழ செய்திகள்சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காங்கிரசில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த மாதத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆவணம் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் சமர்ப்பிக்கப்படவில்லை.
இறுதிக்கட்ட யுத்த காலத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
-
0 comment(s) to... “சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும்”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக