இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்

Posted பிற்பகல் 1:13 by S R E E in லேபிள்கள்:
இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்

இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனிதநேயத்தையோ, அனைத்துலக மரபுகளையோ துளியளவும் பின்பற்றாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிப் போர் எனும் பெயரில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மொத்த நிலபரப்பையும் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஏறத்தாழ 50 ஆயிரம் மக்களை படுகொலை செய்துள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ராஜபக்சே அனைத்துலக போர் மரபுகளை மீறி போர் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஐ.நா. பேரவையில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு பேரவையின் சிறப்பு கூட்டம் ஒன்றை மே 26 ம் நாள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, கியூபா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அது உள்நாட்டு பிரச்சினை என்று சிங்கள அரசுக்கு பொருளாதார உதவிகள் செய்ய அனைத்துலக நாடுகளை வலியுறுத்துகின்றன. குறிப்பாக இந்திய அரசு சிங்கள ஆட்சியாளர்களுக்கு உதவுவதில் மிகத் தீவிரமாக உள்ளதை அறிய முடிகிறது. இந்திய அரசின் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் செய்கிற மாபெரும் துரோகமாகும்.

இந்திய அரசின் இந்த தமிழ் இன விரோத போக்கை விடுதலை சிறுத்தைகள் மிகுந்த வேதனையோடு மிக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உதவ கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

உலக அளவில் சிங்களர்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்தியா முதன்மையான பங்கு வகித்துள்ளதையும் அறிய முடிகிறது. இந்திய அரசு இத்தகைய போக்குகளை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், சிங்களர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை வழிமொழிய கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.


0 comment(s) to... “இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails