பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: விடுதலைப்புலிகள் உளவு பிரிவு அறிவிப்பு

Posted பிற்பகல் 5:30 by S R E E in லேபிள்கள்: , ,
கொழும்பு, மே. 25-விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் ஏற்கனவே அறிவித்தது. இதை விடுதலைப்புலிகள் சர்வதேச விவகார தலைவர் பத்மநாபன் மறுத்தார். மறுநாள் கொல்லப்பட்ட பிரபாகரன் உடலை இலங்கை ராணுவம் காட்டியது.

இதற்கு பின்பும் பத்மநாபன் மறுப்பு தெரிவித்தார். வேறு ஒருவர் உடலை காட்டி பிரபாகரன் என்று கூறுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் பத்மநாபன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் பிரபாகரன் இறந்து விட்டதை ஒத்துக்கொண்டார்.

ஆனால் இதற்கு விடுதலைப்புலிகளின் இணைய தளமான தமிழ்நெட்டில் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச விவகார தலைவர் பத்மநாபன் 17-ந்தேதி நடந்த போரில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக புலம் பெயர்ந்தோர் விடுதலைப்புலிகள் துறை தமிழ் நெட்டிடம் கூறியுள்ள தகவலில் விடுதலைப்புலிகள் தலைமையிடம் இருந்து உரிய ஆதார தகவல் வரும்வரை எதுவும் கூறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு உளவுத்துறை கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார்.

பிரபாகரன் இறந்ததற்கான உறுதியான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்


3 comment(s) to... “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: விடுதலைப்புலிகள் உளவு பிரிவு அறிவிப்பு”

3 கருத்துகள்:

Ramesh சொன்னது…

Any idea? when the info would come out?தாமிரபரணி சொன்னது…

தற்சமயம் மாவீரன் வேலுபிள்ளை தான் இறக்கவில்லை என்று சொல்லும்வரை அவர் இறந்ததாகவே உலகம் நம்பும், ஆனால் இலங்கையில் தமிழ்ஈழம் அமைப்பதிலும், தமிழ் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை இலங்கைக்கு எதிரான போராட்டம் தொடரும் எனபதில் எள்ளளவும் ஐயம் இல்லைதமிழர்ஸ் - Tamilers சொன்னது…


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்கருத்துரையிடுக

Related Posts with Thumbnails