இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கக்கூடாது: பாஜக

Posted 12:55 AM by S R E E in லேபிள்கள்: ,
தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம்,

’’இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும். தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்க கூடாது.

இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபக்ஷவுக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது’’ என்றார் அவர்.

-



1 comment(s) to... “இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கக்கூடாது: பாஜக”

1 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இந்நிலை எப்பொழுது மாறும் என்றே புரியவில்லை



கருத்துரையிடுக

Related Posts with Thumbnails